தீபாவளியில் அஜித்துடன் முதல் ஆளாக மோதும் முக்கிய நடிகர் கார்த்தி!

தீபாவளியில் அஜித்துடன் முதல் ஆளாக மோதும் முக்கிய நடிகர் கார்த்தி!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் இப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்தஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் PS மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் மாஸ் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்படம் தீபாவளியில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.
 
இதனிடையே இப்போதே தீபாவளியில் மோதவுள்ள இரண்டு முக்கிய திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்த தீபாவளி ரேஸில் இன்னும் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
ஏற்கனவே இதேபோல் கார்த்தியின் கைதி திரைப்படம் விஜய்யின் பிகில் படத்துடன் மோதியது, ஆனாலும் அப்படம் 100 கோடிளவில் வசூல் செய்திருந்தது.  

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top