மறைந்த நடிகை சித்ராவின் கால்ஸ்

மறைந்த நடிகை சித்ராவின் கால்ஸ்

தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான சித்ரா நடிப்பில் தயாரான 'கால்ஸ்' திரைப்படம் அவரது திடீர் மறைவிற்கு பிறகு வெளியாகவிருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஜே சபரிஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘கால்ஸ்’. இந்தப் படத்தில் கதையின் நாயகியாக தொகுப்பாளினியும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகையுமான சித்ரா அறிமுகமாகியிருக்கிறார். இவருடன் நடிகர்கள் டெல்லிகணேஷ், நிழல்கள் ரவி, ஆர் சுந்தர்ராஜன், நடிகைகள் தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
 
படத்தை பற்றி இயக்குனர் பேசுகையில், பீபிஓ நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண் ஒருத்தி எதிர்கொள்ளும் எதிர்பாராத சம்பவம் ஒன்றை மையப்படுத்தி திரைக்கதை உருவாகியிருக்கிறது. இதில் கதையின் நாயகியாக துணிச்சலான மற்றும் சவாலான கதாப்பாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் நிறைவுபெற்றது. தற்போது பின்னணி இசை சேர்ப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து இப்படத்தை அடுத்த மாத இறுதியில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் நடிகை சித்ரா காலமானார். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பதே. அதற்குள் அவர் எதிர்பாராவிதமாக மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய விருப்பப்படி இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறோம். அனைவரின் ஆதரவும் வேண்டும்.’என்றார்.
 
நடிகை சித்ரா அறிமுகமான ‘கால்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவர் மறைவிற்குப் பின்னர் வெளியாகி இருப்பதால் இணையத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக ஆதரவு கிடைத்து வருகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top