வித்தியாசமான இயக்குனரின் வித்தியாசமான கதைக்களம் வெற்றி பெறுமா?

வித்தியாசமான இயக்குனரின் வித்தியாசமான கதைக்களம் வெற்றி பெறுமா?

காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் தான் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்ட நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் 'கடைசி விவசாயி' படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஒரு ஆர்ட் படத்தை கமர்ஷியலோடு எடுக்கும் வித்தையை கற்றுள்ள மணிகண்டன், 'கடைசி விவசாயி' படத்தின் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையோ அல்லது காவிரி பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது குறித்தோ கதை சொல்ல போவதில்லையாம்.

பயிர் செய்யும் விவசாயி தான் கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை மயில், மான் மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பாற்ற எப்படி போராடுகிறார் என்பதுதான் கதையாம். பறவைகள் வாழும் மரங்களை வெட்டி சேதப்படுத்தினால் அவை பயிர்களை சேதப்படுத்திவிடும், எனவே பறவைகளை நிம்மதியாக வாழவிடுங்கள்' என்ற கருத்தை தான் தன்னுடைய பாணியில் சொல்ல போகிறாராம் மணிகண்டன்.
 
வித்தியாசமான கோணத்தில் யோசித்துள்ள மணிகண்டனின் கான்செப்ட் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Tags: News, Hero, Lifestyle, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top