சிவகார்த்திகேயனுக்கு தவறுதலாக விருது அளிக்கப்பட்டதா?

சிவகார்த்திகேயனுக்கு தவறுதலாக விருது அளிக்கப்பட்டதா?

தமிழக அரசு நேற்றிரவு 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை அறிவித்தது. ஒரே நாளில் 6 வருடங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது திரைத்துறையினர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த நிலையில் 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருதுக்கு சிவகார்த்திகேயன் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாண்டியராஜன் இயக்கிய மெரீனா படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் இந்த படம் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதிதான் ரிலீஸ் ஆனது. 2012ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஒரு படத்திற்கு எப்படி 2011ஆம் ஆண்டின் விருது? என்று நெட்டின்சன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கு 'இந்த படம் 2011ஆம் ஆண்டே சென்சார் செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்பையில் விருது கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் பதிலளித்து வருகின்றனர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top