இந்திரஜித் கௌதம் கார்த்திக் ஹாட்ரிக் அடிப்பாரா?

இந்திரஜித் கௌதம் கார்த்திக் ஹாட்ரிக் அடிப்பாரா?

'கபாலி', 'வேலையில்லா பட்டதாரி-2' படங்களைத் தொடர்ந்து 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிப்பில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் படம் 'இந்திரஜித்'. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த படம் இது.  இந்த படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணுவின் இளைய மகனும், 'சக்கரக்கட்டி' படத்தை இயக்கியவருமான கலாபிரபு இயக்கியுள்ளார்.

கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அர்ஷிதா ஷெட்டி நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் அட்வெஞ்சர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் வில்லனாக 'பில்லா-2', 'மீகாமன்' ஆகிய படங்களில் நடித்துள்ள சுதன்ஷு பாண்டே நடித்துள்ளார். இந்திரஜித் படத்துக்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் உதவியாளரான கே.பி இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ராசாமதி கவனித்திருக்க, சண்டை காட்சிகளை 'ஃபெஃப்சி' விஜயனும், 'ஸ்டன்' சிவாவும் அமைத்துள்ளனர். 'இந்திரஜித்' படத்தின் ஹைலைட்டாக அப்படத்தில் இடம் பெற்றுள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கும் என்கிறார் இயக்குநர்.

அது மட்டுமல்ல, கௌதம் கார்த்திக் நடித்த படங்களிலே இந்திரஜித் குறிப்பிடத்தக்கப் படமாக இருக்கும் என்றும் சொல்கிறார். "இவன் தந்திரன்", "ஹர ஹர மகாதேவகி" என கௌதம் கார்த்திக் நடித்த படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைந்துவரும் நேரத்தில் "இந்திரஜித்" படம் வெளியாகிறது.

மகன் இயக்கிய படம் என்பதால் பப்ளிசிட்டியில் கலைப்புலி தாணு தெறிக்கவிடுவார். அப்புறமென்ன? "இந்திரஜித்" கௌதம் கார்த்திக்குக்கு ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமைய வாய்ப்பிருக்கிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top