கஜா புயல் பாதிப்பு – சூப்பர்ஸ்டார் ரஜினி 50 லட்சம் ரூபாய் உதவி!

கஜா புயல் பாதிப்பு – சூப்பர்ஸ்டார் ரஜினி 50 லட்சம் ரூபாய் உதவி!

கஜா புயல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு திரையுலகினர் பலரும் ஒவ்வொருவராக உதவிகளை வழங்கி வருகின்றனர்.
 
அந்தவகையில் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றம் மூலம் உதவி மேற்கொள்ள அவர்களின் வங்கி கணக்கில் நிதியுதவி அளித்துள்ளார்.
 
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 50 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கஉள்ளார் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ரஜினிகாந்த் தன்னுடைய சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக நேரடியாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Hero, Madurai News, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top