ஓடிடி மூலம் படவெளியிட்டுக்கு தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு!

ஓடிடி மூலம் படவெளியிட்டுக்கு தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு!

கொரோனா ஊரடங்கு சமயத்தில் பலரும் வீட்டில் முடங்கியதால் திரைப்படங்களை ஓடிடி-யில் வெளியிடும் சூழல் உருவானது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நடிகர் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

நடிகர் தனுஷ் நடித்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் ’ஜகமே தந்திரம்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படத்தை ஓடிடி-யில் வெளியிட வேண்டாம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 
 
’ஜகமே தந்திரம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’ என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top