‘அண்ணாச்சி’க்கு ஜோடியான பாலிவுட் கவர்ச்சி நடிகை

‘அண்ணாச்சி’க்கு ஜோடியான பாலிவுட் கவர்ச்சி நடிகை

'சரவணா ஸ்டோர்ஸ்' உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரௌத்லா நடிக்கிறார்.

'உல்லாசம்', 'விசில்' ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி, 18 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கிவரும் பெயரிடப்படாத படத்தில் தமிழகமெங்கும் பிரபலமான 'சரவணா ஸ்டோர்ஸ்' உரிமையாளர் லெஜண்ட் சரவணன் அருள் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் அறிமுகமாகும் சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரௌத்லா நடிக்கிறார். 2015ஆம் ஆண்டின் இந்திய அழகியாக தெரிவான இவர், இப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
 
இது தொடர்பாக ஊர்வசி ரௌத்லா பேசுகையில்,' இந்த படத்தில் ஐஐடியில் மைக்ரோ பயாலஜி படிக்கும் மாணவியாக நடிக்கிறேன். சயின்ஸ் ஃபிக்ஷன் ஜேனரில் தயாராகும் இந்தப்படத்தில் சரவணன் அருள் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்திய நகரமான மனாலியில் நடைபெற்று வருகிறது.' என்றார்.
 
தன்னுடைய தோற்றம், உயரம், நிறம் குறித்து கவலைப்படாமலும், மற்றவர்களின் விமர்சனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்காமலும், தன்னம்பிக்கையுடன் 'சரவணா ஸ்டோர்ஸ்' விளம்பரத்தில் நடித்த ‘நம்ம அண்ணாச்சி’ சரவணன் அருள், முதல் படத்திலேயே பான்-இந்தியன் நடிகராக அறிமுகமாவதும், அவருக்கு ஜோடியாக பாலிவுட்டைச் சேர்ந்த கவர்ச்சி நடிகை ஊர்வசி ரௌத்லா நடித்திருப்பதும், இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் பட்ஜட்டில் ‘பிரம்மாண்டமாய்’ இந்த படம் தயாராகி வருவதாலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top