பாலிவுட் நடிகை அலியாபட்டின் கதாபாத்திர தோற்றப் புகைப்படம் வெளியீடு

பாலிவுட் நடிகை அலியாபட்டின் கதாபாத்திர தோற்றப் புகைப்படம் வெளியீடு

'பாகுபலி' பட புகழ் இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி வரும் 'ஆர். ஆர். ஆர். 'படத்தில் சீதா என்னும் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்கிறார். அவரது கதாபாத்திர தோற்ற புகைப்படம் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கும் திரைப்படம் 'ரணம் ரௌத்திரம் ரத்தம்'. இந்தப்படத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்களும், அஜய் தேவ்கன்  உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும்,  ஒலிவியா மோரீஸ் உள்ளிட்ட ஹொலிவுட் நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். கே. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கீரவாணி இசை அமைக்கிறார். 400 கோடி ரூபாய் பட்ஜட்டில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் 'சீதா' என்னும் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்கிறார். இப்படத்தில் கொமாரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர், அல்லுரி சீதாராம ராஜு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ராம் சரண் ஆகியோர்களின் கதாபாத்திர தோற்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தற்போது  நடிகை அலியா பட்டின் கதாபாத்திர தோற்ற புகைப்படம்  வெளியிடப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வியக்கவைக்கும் அழகில் கலாச்சார உடையில் நடிகை அலியா பட் அழகு தேவதையாக தோன்றுவதால் இளைய இணையவாசிகள் இணையத்தில் இதனை வைரலாகி வருகிறார்கள்.
 
'ஆர்.ஆர். ஆர்' திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top