பாப்பிலோன் ஆடியோ வெளியீடு

பாப்பிலோன் ஆடியோ வெளியீடு

இசை அமைப்பாளர் ஷாம் மோகன் இசையில் உருவான 'பாப்பிலோன்' படத்தின் ஆடியோவை மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் கோபால் வெளியிட்டார்.

புதுமுக இயக்குனர் ஆறு ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'பாப்பிலோன்'. இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருக்கும் இயக்குனர் ஆறு ராஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்வேதா ஜோயல் நடித்திருக்கிறார். இவர்களுடன் 'பூ' ராமு, வினோத் ,அபிநயா ,சௌமியா, ரேகா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்ய ஷாம் மோகன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகைகள் கோமல் ஷர்மா, சுருதி ரெட்டி, 'நகைச்சுவை நாயகி' மதுமிதா, 'நக்கீரன்' கோபால் உள்ளிட்ட பலர் அதிதிகளாக பங்குபற்றினர்.
 
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' இளம் பெண்கள் கயவர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்' என அடிக்கடி செய்திகள் வெளியாவது உண்டு. குறிப்பாக தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம்... இது போன்ற நிகழ்வுகள் எதனால் அதிக இடங்களில் நடைபெறுகிறது? இதற்கு என்ன காரணம்? என்னதான் முடிவு? என பல கேள்விகளை உள்ளடக்கி, நிஜ சம்பவங்களை மையமாக வைத்து, சில மாற்றங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளேன்.' என்றார்.
 
இப்படத்தின் ஆடியோவை நக்கீரன் கோபால் வெளியிட, நடிகை கோமல் சர்மா, சுருதி ரெட்டி, மதுமிதா உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top