சிம்புவுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா!!!

சிம்புவுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா!!!

சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.
 
இந்த படப்பிடிப்பில் சிம்பு, ஸ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா இந்த படத்தில் சிம்புவின் இன்னொரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
 
சிம்புவும் தமன்னாவும் பல வருடங்களாக நடித்து வந்தபோதிலும் தற்போதுதான் முதல்முறையாக ஜோடியாக நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தனது குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த் மற்றும் படத்தொகுப்பாளராக ரூபன் பணியாற்றி வருகின்றனர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top