8 மாத காத்திருப்பிற்குப்பின் கிடைத்த அருவி நாயகி!

8 மாத காத்திருப்பிற்குப்பின் கிடைத்த அருவி நாயகி!

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அருவி“. இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவி குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் சொசியோ – பொலிடிகல் படமாக உள்ள இத்திரைப்படத்தின் கதாநாயகிகான தேர்வு மட்டும் 8 மாதம் நடந்துள்ளது. தேர்வில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோரிலிருந்து தேர்வுசெய்யப்பட்டவர் தான் நாயகி அதீதி பாலன். இப்படத்தில் அதீதி பாலன் “அருவி“ என்ற டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார்.

அருவி எனும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சுவாரஸ்யமான விஷயங்களின் தொகுப்பு தான் இப்படத்தின் கதைக்களம். ஒரு கோணத்தில் இருந்த பார்த்தால் இப்படம் அருவி என்ற பெண்ணின் பையோ- கிராபி போல் இருக்கும். இன்னொரு கோணத்தில் இப்படம் அருவி சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், அவள் கடந்து செல்லும் பாதையில் நிகழும் பிரச்சனை, அவள் சந்திக்கும் மனிதர்கள் என சமூகம் சார்ந்த பேசும் ஒரு கதையாக இருக்கும்.

மேலும் இப்படத்தில் முகமது அலி பாய்க் என்ற ஹைதராபாதை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட், அஞ்சலி வரதன் என்ற திருநங்கை, லட்சுமி கோபால் சாமி என்ற கன்னட நடிகை, மதன் என 20க்கும் மேற்பட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல், மும்பை இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல், நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் கேரளா, தி ஹபிடேட் பிலிம் பெஸ்டிவல் டெல்லி, தி பயோஸ்கோப் குளோபல் பிலிம் பெஸ்டிவல் பஞ்சாப் என பல்வேறு பிலிம் பெஸ்டிவல்களில் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்து இயக்கம் – அருண் பிரபு புரஷோதமன், ஒளிப்பதிவு – ஷெல்லி கலிஸ்ட், இசை – பிந்து மேனன், வேதாந்த பரத்வாஜ், தயாரிப்பு – எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top