தந்தை - மகள் இடையிலான உறவை பேசும் 'அன்பிற்கினியாள்'

தந்தை - மகள் இடையிலான உறவை பேசும் \'அன்பிற்கினியாள்\'

சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிகர் அருண்பாண்டியன் தயாரித்து, நடித்திருக்கும் 'அன்பிற்கினியாள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா', 'ஜூங்கா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அன்பிற்கினியாள்'. இந்தப் படத்தில் மூத்த நடிகர் அருண்பாண்டியன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்திருக்கிறார். அவரது மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார்.
 
தந்தை - மகள் இடையிலான உறவை வித்தியாசமான கோணத்தில் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த 'அன்பிற்கினியாள்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கார்த்தி வெளியிட்டிருக்கிறார்.
 
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஹெலன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், நிஜ வாழ்க்கையில் தந்தையும் மகளுமான அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இரண்டு வித புகைப்படங்களுடன் வெளியாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top