'ஆலம்பனா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

\'ஆலம்பனா\' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆலம்பனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் பாரி கே. விஜய் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ஆலம்பனா'. இந்தப்படத்தில் வைபவ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஸ்காந்த், கபீர் துகான் சிங், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்திருக்கிறார். 
 
ஃபேண்டசி கொமடி ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் வைபவ் மற்றும் முனிஸ்காந்த்தின் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்தப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top