குடும்பத்துடன் கோவாவில் ஓய்வெடுக்கும் அஜித்

குடும்பத்துடன் கோவாவில் ஓய்வெடுக்கும் அஜித்

விஸ்வாசம் படத்தை முடித்த நடிகர் அஜித், தற்போது குடும்பத்துடன் கோவாவில் ஓய்வெடுத்து வருகின்றார்.

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்பப் பணிகள் தற்போது நடந்து வருவதுடன், பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகும் என அறிவித்து உள்ளனர்.
 
அஜித் நடிக்கும் அடுத்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பதாகவும், சதுரங்க வேட்டை படத்தை இயக்கி பிரபலமான வினோத் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இவ்விடயம் தொடர்பாக போனிகபூர் 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்து அஜித்தை அவரது இல்லத்தில் சந்தித்து பட வேலைகள் குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.
 
இந்நிலையில் அஜித் சென்னை திரும்பியதும் போனிகபூர் தயாரிக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top