யாருடைய 3-வது கூட்டணி வெல்லும்?

யாருடைய 3-வது கூட்டணி வெல்லும்?

அஜித் நடித்து வரும் 'விவேகம்' வரும் ஆகஸ்ட் மாதமும், விஜய் நடித்து வரும் 'மெர்சல்' வரும் தீபாவளி தினத்திலும் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் அஜித், விஜய் இருவரின் அடுத்த படங்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது ஏ.ஆர்.முருகதாஸ் என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது விஷ்ணுவர்தன் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். இதற்கான பேச்சுவார்த்தைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் துப்பாக்கி, கத்தி படங்களை அடுத்து விஜய்-முருகதாஸ் கூட்டணியும், பில்லா, ஆரம்பம் படங்களை அடுத்து அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டனியும் 3வது முறையாக இணைகிறது என்பது ஒரு வித்தியாசமான ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. யாருடைய 3வது கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top