அதர்வாவின் 'குருதி ஆட்டம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அதர்வாவின் \'குருதி ஆட்டம்\' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் அதர்வா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குருதி ஆட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

'8 தோட்டாக்கள்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'குருதி ஆட்டம்'. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
 
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. நாளை இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் அதர்வாவின் முதுகில் கத்திகள் குத்தப்பட்டிருக்கும் தோற்றம், எக்சன் அவதாரத்தை ரசிகர்களுக்கு கடத்துவதால் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top