பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கு ரஜினி பட டைட்டில்

பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கு ரஜினி பட டைட்டில்

ஒரு காலத்தில் அஜித், விஜய்க்கு இணையாக கோலிவுட் திரையுலகில் தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்த வந்த நடிகர் பிரசாந்த் கடந்த ஆண்டு வெளிவந்த 'சாகசம்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

இயக்குனர் ஜீவாஷங்கரின் உதவியாளர் வெற்றிச்செலவன் இயக்கவுள்ள முதல் படத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்த சூப்பர் ஹிட் படமான 'ஜானி' படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுக்காக 'ஜானி' தயாரிப்பாளரிடம் முறையான அனுமதி பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக அனன்யா சோனி என்பவர் நடிக்கவுள்ளார். எவர் ஏற்கனவே ஒருசில தெலுங்கு படத்தில் நடித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் ஆண்டனி நடித்த 'நான்' படத்தின் இந்தி ரீமேக்கிலும் பிரசாந்த் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் பணிகள் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top