நடிகர் கிருஷ்ணாவின் 'பெல்பாட்டம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் கிருஷ்ணாவின் \'பெல்பாட்டம்\' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் 'பெல்பாட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'கழுகு', 'கழுகு 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'பெல்பாட்டம்'. இந்தப் படத்தில் நடிகர் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடிக்கிறார். கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'பெல்பாட்டம்' என்ற படம், அதே பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. 
 
படத்தைப் பற்றி இயக்குனர் சத்யசிவா பேசுகையில், 'நடிகர் கிருஷ்ணா 1980களில் ஆண்களின் நாகரீக உடையான பெல்பாட்டம் அணிந்து பொலிசாக அடிக்கிறார்.  பொலிசாக நடித்தாலும் துப்பறியும் புலனாய்வு பொலிசாக நடிக்கிறார். அந்தக் காலகட்டத்தில் கள்ளச் சாராயம் விற்கும் பெண்ணாக நடிகை மகிமா நம்பியார் நடிக்கிறார்'. என்றார்.  ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.
 
காதலர் தினம் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 14.02.2021 இணையத்தில் வெளியானது. இவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top