சிவாவிற்கு தந்தையான பிரபல காமெடி நடிகர்!!!

சிவாவிற்கு தந்தையான பிரபல காமெடி நடிகர்!!!

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி மற்றும் குணசித்திர நடிகரான சார்லி, சிவகார்த்திகேயனின் தந்தையாக நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து சார்லி பேட்டின் ஒன்றில் கூறியபோது, ஆம், நான் சிவகார்த்திகேயன் தந்தையாக 'வேலைக்காரன்' படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் தந்தை-மகன் உறவு மிகவும் வித்தியாசமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். அதே நேரத்தில் மகனுக்கு ஊக்கமுட்டுபவராகவும், முதுகெலும்பாகவும் இருக்கும் கேரக்டரில் நடித்துள்ளேன்.

சிவகார்த்திகேயன் ஒரு ஜாலியான நபர். அவருடன் பணிபுரிவது எனக்கு மிகவும் வசதியாக இருக்கும். சிவகார்த்திகேயனின் காதலியாக நயன்தாரா இந்த படத்தில் நடித்திருந்தாலும் எனக்கும் நயன்தாராவுக்கும் இணைந்து ஒரு காட்சி கூட இல்லை' என்று சார்லி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top