நடிகர் அஜித்தின் ஆட்டோ பயணம்!

நடிகர் அஜித்தின் ஆட்டோ பயணம்!

கடைசியாக ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்த அஜித், அடுத்ததாக இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் தனது 60-வது திரைப்படமான வலிமையில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே டைட்டான கால அட்டவணைக்கு மத்தியில் துப்பாக்கி சுடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.

இப்போது அவரின் அன்சீன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகராக இருந்தாலும் மிகவும் எளிமையான மனிதராகக் கருதப்படும் அஜித், ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ தான் அது. அந்த ஆட்டோவை பின்தொடர்ந்த ஒரு ரசிகர் இந்த வீடியோவை எடுத்ததாக தெரிகிறது.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top