ஏவிஎம்மின் 'தமிழ் ஸ்டாக்கர்ஸ்'

ஏவிஎம்மின் \'தமிழ் ஸ்டாக்கர்ஸ்\'

திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு 80 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஏவிஎம் நிறுவனம் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 'தமிழ் ஸ்டாக்கர்ஸ்' என்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.

'ஈரம்', 'வல்லினம்', 'ஆறாது சினம்', 'குற்றம் 23' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம் 'தமிழ் ஸ்டாக்கர்ஸ்'. சோனி லிவ் என்ற டிஜிற்றல் தளத்தில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கிறது. இதுதொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
படத்தைக் குறித்து இயக்குனர் அறிவழகன் பேசுகையில்,' தமிழ் சினிமாவில் மட்டுமல்ல சினிமாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது படமாளிகையில் வெளியாகும் திரைப்படங்களை எந்த வித உரிமையும் பெறாமல் திருட்டுத்தனமாக ஓன்லைன் வெளியிடுகிறார்கள்.  சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இந்த ஓன்லைன் திருட்டு. தமிழ் திரை உலகின் வணிகத்தை பாதிப்பதுடன் மட்டுமல்லாமல், படைப்பு திருட்டிலும் ஈடுபடுகிறது. இதுகுறித்த விவரங்களையும், இதன் பின்னணியையும் திரில்லர் ஜேனரில் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம். இது திருட்டு வலைதளங்களின் இருண்ட பக்கத்தை அதற்கேயுரிய எதார்த்தத்துடன் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறோம். அத்துடன் இது தொடர்பாக திரைத்துறையினர்  மேற்கொண்ட முயற்சிகளையும் விவரித்திருக்கிறோம். ஏவிஎம் றுவனத்தின் மூன்றாம் தலைமுறை தயாரிப்பாளர்களான அருணா குகன், திருமதி அபர்ணா குகன் ஷாம், ஏவிஎம் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சோனி லிவ் டிஜிற்றல் தளத்தில் நேரடியகாக வெளியாகவிருக்கிறது.' என்றார்.
 
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ 5 போன்ற பிரபலமான முன்னணி டிஜிற்றல் தளங்களைப் போல், சோனி லிவ் என்ற டிஜிற்றல் தளமும் திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் பட்டியலில் இணைந்திருக்கிறது. இந்த டிஜிற்றல் தளத்தில் வெளியிடுவதற்காக ஏவிஎம் நிறுவனமும், இயக்குனர் அறிவழகனும் இணைந்து 'தமிழ் ஸ்டாக்கர்ஸ்'ஸை உருவாக்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top