தமிழக அரசால் தனிமைப்படுத்தப்பட்டதா பாஜக?

தமிழக அரசால் தனிமைப்படுத்தப்பட்டதா பாஜக?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர்கள் கூறிய கருத்தால் இந்த படத்தின் வசூல் தாறுமாறாக எகிறியது மட்டுமின்றி, இந்த படம் தேசிய அளவிலும் பரபரப்புடன் விவாதம் செய்யப்பட்டது.

பாஜக தலைவர்களின் எதிர்ப்புக்கு தமிழக, தேசிய கட்சிகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆளும் அதிமுக அரசும் மெர்சல் படக்குழுவினர்களுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.

இன்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'மெர்சல் படத்திற்கு தமிழக அரசின் ஆதரவு உண்டு' என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே நடிகர் விஜய்யை பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்வதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 'மெர்சல்' விஷயத்தில் பாஜக தனிமைப்படுத்தப்பட்டதாகவே கருதப்படுகிறது

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top