உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் விஜய் சேதுபதி!

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் விஜய் சேதுபதி!

கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துவிட்ட நடிகர்களின் பட்டியலில் விஜய்சேதுபதியும், உதயநிதி ஸ்டாலினும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அவரவர் பாணியில் நடித்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் முதன்முதலாக ஒரு படத்தில் இருவரும் இணைந்துள்ளனர்.

ஆம், உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'இப்படை வெல்லும்' படத்தின் சில பின்னணி வசனங்களுக்கு விஜய்சேதுபதி குரல் கொடுக்கவுள்ளார். இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் கவுரவ் கூறியபோது, 'இந்த படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுக்க விஜய்சேதுபதியை அணுகினோம். அப்போது அவர் படத்தின் சில காட்சிகளை பார்த்து ஆர்வமாகி குரல் கொடுக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் அவரது பங்களிப்பு இருப்பதை பெருமையாக கருதுகிறோம்' என்றார்.

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துவரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top