சென்னையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்

சென்னையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்

தமிழ் - ஹிந்தி - தெலுங்கு என இந்திய திரையுலகில் ஆழமாக கால் பதித்து இருக்கும் ஸ்ருதிஹாசன், சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாள் விழாவை, சென்னையில் உள்ள  அவருடைய தந்தை கமல் ஹாசனின்  வீட்டில் கொண்டாடினார்.

எளிமையாக நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனின் லண்டன் மற்றும் மும்பை நண்பர்கள், தமன்னா பாட்டியா, ஜீவா, விஷால் மற்றும் இயக்குநர் - நடன இயக்குநர் - நடிகர் பிரபுதேவா என சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். 

முன்னதாக ஸ்ருதிஹாசனின் பிறந்த நாள், தற்போது அவர் தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பிலும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த 2017 ஆம் ஆண்டில் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் பெஹென் ஹோகி (ஹிந்தி), சூர்யா நடித்திருக்கும்  'சிங்கம் 3' (தமிழ்), அவருடைய தந்தையின் படமான 'சபாஷ் நாயுடு' (தமிழ் - ஹிந்தி - தெலுங்கு) மற்றும் பவன் கல்யாணின் தெலுங்கு படம்  என மூன்று மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top