நடிகர் மற்றும் இயக்குனரால் கோபமானேன் – டயானா
Posted on 11/09/2017

ரஞ்சித் திவாரி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஃபர்கான் அக்தர் நடிக்கும் படம் “லக்னோ சென்ட்ரல்”. இந்த படத்தில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய தோழியும் மாடலுமான டயானா பெண்ட்டி ஃபர்கானுக்கு இணையாக நடிக்கிறார். இவர் காக்டைல் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டின் நாயகியாக அறிமுகமானவர்.
“லக்னோ சென்ட்ரல்” படத்தில் நடித்ததைக் குறித்து டயானாவிடம் கேட்டபொழுது, "படப்பிடிப்பு தளத்தில் தொடக்கத்தில் நடிகர் ஃபர்கான் மற்றும் இயக்குனர் ரஞ்சித் திவாரியால் நான் சிறிது கோபப்பட்டேன். பின், படப்பிடிப்பு தளம் போக போக எங்களுக்கு பழக்கமாக, அவர்களுடன் இணைந்து பணிபுரிவதால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
Tags: News, Hero, Star