ஸ்கரப் டைபஸ் என்ற புதிய வகை தொற்று பாதிப்புக்குரிய சிகிச்சை

ஸ்கரப் டைபஸ் என்ற புதிய வகை தொற்று பாதிப்புக்குரிய சிகிச்சை

அண்மைக்காலமாக இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளில் ஸ்கரப் டைபஸ் என்ற புதிய வகை தொற்று பாதிப்பு பரவி வருகிறது. இது தொடர்பாக மருத்துவர்கள் தற்போது விளக்கமளித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பாதிப்பு பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் என்ற பெயரில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் வட பகுதிகளிலும், தெற்காசிய நாடுகள் சிலவற்றிலும் மக்கள் புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினர், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்றும், Mite-Borne Rickettsiosis  எனப்படும் ஸ்கரப் வகை வைரஸ் கிருமியால் இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கண்டறிந்தனர். மேலும் Orientia Tsutsugamushi என்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படக்கூடிய நோய்தான் இந்த ஸ்கரப் டைபஸ் பாதிப்பு என்று விளக்கமளித்தனர்.
 
இத்தகைய பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் பூச்சிகள், மனிதர்களை கடிப்பதால் இந்த பாதிப்பு மனிதர்களுக்கும் பரவுகிறது. ஸ்கரப் டைபஸ் பாதிப்பு ஏற்பட்டால் மனிதர்களுக்கு தலைவலி, காய்ச்சல், அரிப்பு, உடல் வலி, மூட்டுவலி, நுரையீரல் அழற்சி, சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சை பெறாவிட்டால், மூளைக்காய்ச்சல், இதய செயலிழப்பு, கோமா நிலைக்கு செல்வது போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதற்கு மருந்துகள் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
 
இதனை தவிர்க்க வேண்டுமென்றால் நுளம்பு மற்றும் பூச்சிகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும். வீடுகள் மற்றும் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 
டாக்டர். ஸ்ரீதேவி
தொகுப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top