மன அழுத்தமே அல்சருக்கு முக்கிய காரணம்!

மன அழுத்தமே அல்சருக்கு முக்கிய காரணம்!

அல்சர் என்றவுடன் அனைவர் மனதிலும் வரக்கூடியது வயிற்றுப்புண் ஆனால் அல்சர் என்பது பொதுவான சொல். உலகின் எந்த பகுதியில் புண் ஏற்பட்டாலும் அதை அல்சர் என்றுதான் கூறுவோம்.

அவ்வாறு இருக்கும்போது நாம் ஏன் அல்சர் என்ற உடன் வயிறு (அல்லது) Gastric, Peptic அவ்வாறு ஏன் சிந்திக்க வேண்டும். நிசப்தமான உண்மை என்ன என்றால் உலகளவில் 50 முதல் 60% மக்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த வயிற்றுப்புண் என்பது வயிற்றில் ஏற்படக்கூடிய புண் (Gastric & Ulcer) சிறு குடலில் ஏற்பட்டால் அது (Duodental Ulcer) அல்சர் எனப்படும். இது வருவதற்கான முக்கிய காரணம் Hrycoal - Bacterium. மேலும் மக்கள் இந்த பிரச்சினையால் அவதிபடுவதற்கு முக்கிய காரணம் மனஅழுத்தம் (stress). மேலும் மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்வது (NSADI, Anti Bleeding) மற்றும் தவறான பழக்க வழக்கங்கள். (ஸ்மோக்கிங், மதுஅருந்துதல்) மேலும் தவறான வாழ்க்கை முறையினால் வரக்கூடிய ஒபிசிட்டி எனப்படும் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெரும்பகுதியினர் அவதிகொள்வது, நெஞ்சு எரிச்சல், அஜுர்ண கோளாறுகள், வாந்தி, பசியின்மை, உணவை கண்டால் பயஉணர்வு மேலும் பிடித்த உணவை கூட உண்ண முடியாத நிலை, மேலும் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வலி உண்டாகும்.

வயிற்றுப்புண் இருந்தால் சாப்பிட்டாலும் வலி தீராது. மேலும் சரியான சிகிச்சை முறை இல்லாவிட்டால் இரத்தம் கலந்த வாந்தி ஏற்படும் அபாயம் உள்ளது. சாப்பிட்டவுடன் மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து வலி வந்தால் அது குடல்புண் ஆகும். முந்தைய நிலையில் மலம் வழியாக இரத்தம் போகும் அவநிலை உண்டாகும். இதை நாம் வராமல் தடுப்பதற்கு முதலில் மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவு உண்பது அவசியம்.

Dr. B. Dhayalan, BHMS, M.D (Hom), MD (Acu), M.Sc (Psychotherapy)

Madurai Homeopathy,

Cell: 9442050880

Tags: News, Beauty, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top