இன்றைய தொழில்நுட்பத்தில் குறட்டை பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது!

இன்றைய தொழில்நுட்பத்தில் குறட்டை பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது!

“சுத்தமான தண்ணீர், ஆரோக்கியமான உணவுப் பொருள், ஒலிமாசு மற்றும் சுற்றுப்புற சூழல் மாசு இல்லாத நிலை ஆகியவற்றை உருவாக்கிடவேண்டும். அத்துடன் சாலைகளில் பயணிக்கும் போது எழுப்பப்படும் ஒலி மாசால் நம்மில் பலருக்கும் திடீரென்று தலைவலி மற்றும் தற்காலிகமான மன உளைச்சல் ஆகியவை ஏற்படும். இதனைவும் தவிர்க்கவேண்டும். ஒலி மாசுக்கட்டுப்பாடு குறித்தும் போதிய அளவிற்கு விழிப்புணர்வு வரவேண்டும். இதனை தொடர்ந்து செய்தால் ஒரு ஆரோக்கியமான தலைமுறையையே உருவாக்கிய பெருமை நம்மையெல்லாம் வந்தடையும் என்பது உறுதி” என ஆட்டோரைனோலாரிங்காலஜி துறை குறித்து பேசத் தொடங்குகிறார் சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கிவரும் குளோபல் மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவின் தலைமை மருத்துவ நிபுணரான டாக்டர். K.கிருஷ்ணகுமார்.

அண்மையில் சாதித்த சிக்கலான மருத்துவ சவால் குறித்து..?

ஒரு பெண்மணி குறட்டை பிரச்சினையால் மூச்சு திணறலுக்கு ஆளாகி ஒரு சிக்கலான தருணத்தில் இருந் தபோது எம்மைச் சந்தித்து ஆலோசனை கேட்டார். அவர்களை பேச வைத்ததில், குறட்டை பிரச்சினை நீண்ட நாளாக இருந்து வந்திருக்கிறது. அதற்காக அவர்கள் பிரத்யேகமான ஸீபேப் என்ற இயந்திரத்தினை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். மூச்சு திணறல் இருப்பதால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. அத்துடன் உடல் எடையும் தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டேயிருந்தது. இந்நிலையில் எம்மைச் சந்தித்து இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினார். நான் முதலில் அவர்களுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை. ஏனெனில் குறட்டையை தடுப்பதற்கான அறுவை சிகிச்சையொன்றினை தற்போது அவர்கள் வாழுமிடத்திலேயே மேற்கொண் டிருந்தார்கள். அதன் விளைவும் பலனும் எதிர்பார்த்தது போலில்லாமல் இருந்ததால் தொடர்ந்து அவர்கள் தினமும் அந்த ஸீபேப் என்ற இயந்திரத்தின் உதவியுடனேயே உறக்கத்தை தொடர்ந்திருக்கிறார்கள்.

அவருக்கு சில பரிசோதனைக்கு பின் அறுவை சிகிச்சை செய்தேன். அவருக்கு மேலண்ணத்தில் தான் சற்று சிக்கல் இருப்பது தெரிய வந்தது. அத்துடன் மூக்கில் வளர்ந்த சதையையும் அகற்றினேன். அறுவை சிகிச்சை முடிந்தவுடனே அவர்களால் மாற்றத்தை உணர முடிந்தது. அன்றிரவு அவர்கள் ஸீபேப் என்ற இயந்திரத்தின் உதவியில்லாமல் நன்றாக தூங்கினார்கள். அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை கொடுத்தது.

குறட்டை பிரச்சினைக்காக கோப்ளேசன் சத்திர சிகிச்சைதான் நிரந்தர தீர்வா?
முதலில் இப்பிரச்சைனையின் முக்கியத்துவத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். முன்பெல்லாம் குறட்டைவிட்டால் அது அமைதியை கெடுப்பதற்கான ஒரு நியூசென்ஸாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதியில் குறட்டை விடுபவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. அத்துடன் உயர்ரத்த அழுத்தம், ப்ரெய்ன் ஸ்ட்ரோக்  எனப்படும் மூளை பக்க வாதம் மற்றும் நிரிழிவிற்கும் ஆளாகிறார்கள் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஒரு சிலருக்கு Day Time Sleeping வந்துவிடும். அதாவது பகலில் தூங்குவது, இவர்கள் வாகனத்தை ஓட்டுபவராக இருந்தால் விளைவு விபத்தாகத்தானிருக்கும். அத்துடன் இவர்களுக்கு கான்ஸன்ட்ரேசன் மற்றும் நினைவுத்திறன் ஆகியவை குறைந்து விடும் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

குறட்டை பிரச்சினையைகளைய மூன்று உபாயங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒன்று எடை குறைப்பு, மற்றொன்று ஸீபேப் மூன்றாவதும் மற்றும் இறுதியானதாக காப்ளேசன் என்ற அறுவை சிகிச்சை. இவைகளுக்கு முன் அவர்களுக்கு குறட்டை பிர்ச்சினையின் பாதிப்பு எந்தளவில் இருக்கிறது என்பதை அறிய இரண்டு வகையான சோதனைகள் மேற்கொள்வார்கள். ஒன்று ஸ்லீப் ஸ்டடியிங். அதாவது தூக்கத்தை நவீன கருவிகளின் உதவியுடன் பதிவு செய்து ஆய்தல், இந்த சோதனையின் முடிவில் நோயாளிக்கு எந்த அளவிற்கு மூச்சு திணறல், மூக்கடைப்பு, அடைப்பு, இதயத் துடிப்பு ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து ஸ்லீப் எண்டாஸ்கோப் என்ற சோதனையை செய்வார்கள். நோயாளியை மயக்க நிலைக்கு அழைத்துச் சென்று, குறட்டையின் போது எந்த பாகம் பாதிக்கப்படுகிறது என்பதை துல்லியமாக கண்டறிவார்கள். இதன் பிறகே அவர்களுக்கு மேற்கூறிய மூன்று உபாயங்களில் எது பொருத்தமானதாக இருக்கும் என்பதை தீர்மானிப்பார்கள்.

குறட்டையை முன் கூட்டியே தடுக்கலாமா?
குறட்டையை முன்னமேயே தடுக்க இயலாது. ஆனால் உடல் எடையை சீராக பராமரித்து வருவதாலும், உடல்பயிற்சி மற்றும் சத்தான உணவு சாப்பிட்டு வருவதாலும் தான் இதனை வராமல் தடுக்க இயலும். தூக்கத்தின் போது மேலண்ணம் மற்றும் நாக்கின் செயல்பாடுகளைப் பொறுத்தே குறட்டை பிரச்சினை அமைந்திருக்கிறது.

குறட்டைக்காக பரிந்துரைக்கப்படும் ஸீபேப் இயந்திரத்தின் சாதக பாதக அம்சம் குறித்து..?
குறட்டையை எதிர்கொள்ள மருத்துவர்கள் ஸீபேப் என்ற இயந்திரத்தை பரிந்துரைத்திருந்தால் அதனை ஆண்டின் 365 நாள்களும் அதன் உதவியுடன் தான் உறங்கவேண்டும். இது தான் பலருக்கு நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்த்து நீங்கள் உறங்க முற்பட்டீர்கள் என்றால் மூச்சு திணறல் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இது எப்படி இயங்குகிறது என்றால், இதற்காக வழங்கப்படும் முகமூடியை முகத்தில் அணிந்து கொண்டு, இதனுடன் இணைக்கப்பட்டுள்ள குழாயை அருகிலுள்ள ஒரு உருளையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது எம்முடைய உறக்கத்தின்போது வெளிப்படும் காற்றையும், உள்ளிழுக்கும் காற்றையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் குறட்டை வருவதை தடுக்கிறது.

குரல் சோர்வு ஏற்படுவதனால் நுரையீரல் பாதிக்கப்படும் என்கிறார்களே உண்மையா?
குரல் சோர்வினால் நுரையீரல் பாதிக்கப்படாது. ஆனால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் காரணமாகவும் குரல் சோர்வு அதாவது Vocal Fatique வரலாம். அதே தருணத்தில் குரல்வளை பகுதியில் புற்றுநோய் வந்திருந்தால் அதன் காரணமாக நுரையீரல் பாதிக்கப்படலாம். பொதுவாக குரல் சோர்வு யாருக்கு வரும் என்றால், குரலை சரியாகப் பயன்படுத்தாதவர்கள், குரலை அதிகளவில் பயன்படுத்துபவர்கள், அதிக ஒலியளவில் பேசுபவர்கள் ஆகியோர்களுக்குத்தான் வரும். இதற்கு சரியான ஓய்வு மற்றும் முறையான மருத்துவ ஆலோசனை இருந்தால் போதும் குணமாகிவிடும். ஒரு சிலருக்குதான் ஸ்பீச் தெரபி என்ற சிகிச்சை தேவைப்படலாம்.

Sore Throat எனப்படும் தொண்டை வலிக்கான நிவாரணம் குறித்து..?
தொண்டை வலிக்கு பிரதான காரணமே நம்மில் அனைவரும் தாகத்திற்காக அருந்தும் தண்ணீர் தான் காரணம். சுத்தமான ஆரோக்கியமான தண்ணீரை பருகினால் இவை வராது. அதேபோல் உணவுப் பொருளில் கலக்கப்பட்டிருக்கும் கார்பனேட் வீதங்களினாலும் இப்பிரச்சினை வரலாம். ஒரு சிலருக்கு ஐஸ்கிரீம் ஒப்புக்கொள்ளாது. அவர்கள் அதனை மீறி சாப்பிட்டால் தொண்டை வலி வருவதற்கு வாய்ப்புண்டு.

ஸ்ட்ரோப் பரிசோதனை எப்போது மேற்கொள்ளப்படுகிறது?
குரல்வளையை பரிசோதிக்கும் போது சாதாரண நிலையில் எண்டோஸ் கோப்பை வைத்து கண்காணிப்போம். இதன் மேம்படுத்தப்பட்ட நிலைதான் ஸ்ட்ரோப் என்பது. அதாவது இப்பரிசோதனையின் போது செலுத்தப்படும் ஒளியானது, விட்டுவிட்டு ஒளிர்வதால், ஒளிபடும் இடங்களில் உள்ள பகுதிகளின் செயல்பாடுகள் ஸ்லோமோஷனில் காட்சிப்படுத்தப்படுகிறது. இதனால் பிரச்சினை என்ன என்பதும், எங்கு என்பதும் துல்லியமாக கண்டறிய முடியும். சாதாரண எண்டாஸ்கோப்பில் இருப்பதை விட இதன் முடிவுகள் துல்லியமாகவும், தெளிவாகவும் இருக்கிறது. இதன் முடிவை வைத்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை அவசியமா? அல்லது ஸ்பீச் தெரபியே போதுமா? என்பதை உறுதியாக்க இயலும்.  

சைனஸ் தொல்லைக்கு என்ன தான் தீர்வு?
நம்முடைய மண்டை யோட்டுப் பகுதிக்குள் மூன்று இடங்களில் காலியான பகுதிகள் உள்ளன. நடக்கும் போது எடையை பராமரிக்கவும், பேசும் போது தேவையான அளவிற்கு ஒய்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இயற்கையாக அமைந்திருக்கிறது இந்த அமைப்பு. இதில் சளி சேரும் போதோ அல்லது சதை வளரத் தொடங்கும் போதோ தான் சைனஸ் தொல்லை உண்டாகிறது. இந்த சதையைத்தான் பொலிப் என்கிறோம். இவை மூக்கின் உட்பகுதியிலும் இருக்கும். சைனஸ் பகுதியிலும் இருக்கும். இதனை களைந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும் போது தான் சைனஸ் மற்றும் சளி தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
தொடர்புக்கு: 9788523470 / 9840538112

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top