வலிப்பு நோய்க்கு முழுமையான நிவாரணமளிக்கும் நவீன சத்திர சிகிச்சை!

வலிப்பு நோய்க்கு முழுமையான நிவாரணமளிக்கும் நவீன சத்திர சிகிச்சை!

உலகம் முழுவதும் 50 மில்லியன் மக்கள் எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 70 சதவீத மக்கள் சரியான தருணத்தில் இந்த பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை பெற்று, முழுமையான நிவாரணம் நிவாரணம் பெற்று வாழ்க்கையை  மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் தற்போது எலக்ட்ரோ கார்டியோகிராபி என்ற நவீன பரிசோதனை மூலம் இத்தகைய பாதிப்புகள் துல்லியமாக அவதானிக்கப்பட்டு நிவாரண சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இ. இ. ஜி என்ற நவீன மருத்துவ தொழில்நுட்ப காணொளியுடன் மூளை நரம்பில் ஏற்படும் பாதிப்பைக் கண்டறிகிறார்கள். இதனைத்தொடர்ந்து நியூரோ நேவிகேஷன் என்ற கருவி மூலம் பாதிக்கப்பட்டுள்ள மூளை பகுதியில் எலக்ட்ரோ கார்டியோகிராபி ( Elctro Corticography ) என்ற நவீன சிகிச்சை வழங்கப்படுகிறது. இதன்போது மூளைப் பகுதியில் உள்ள ஆரோக்கியமான நரம்புகள் எந்தவித பாதிப்புக்கும் ஆளாவதில்லை. இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் ஓராண்டு காலம் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம். வேறு சிலருக்கு ஏற்படும் Paroxysm மற்றும் Hysteriform என்ற தற்காலிக மற்றும் திடீர் வலிப்பு நோய்க்கும் முழுமையான நிவாரண சிகிச்சைகள் அறிமுகமாகியிருக்கிறது.
 
டாக்டர். ராஜேஷ்
தொகுப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top