Pityriasis Rosea என்ற தோல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Pityriasis Rosea என்ற தோல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

எம்மில் பலருக்கு ரிங்வார்ம் (Ringworm) எனப்படும் படர்தாமரை தோல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் சிலருக்கு படர்தாமரை போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அது படர்தாமரை பாதிப்பல்ல. அதன் பெயர் Rityriasis Rosea. இத்தகைய பாதிப்பிற்கு தற்போது லைட் தெரபி எனப்படும் நவீன சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பிட்ரியாஸிஸ் ரோஸா என வகைப்படுத்தப்படும் இந்த தோல் பாதிப்பு ஆண்களை விட பெண்களை அதிக அளவு பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக 10 முதல் 35 வயதுள்ள பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. ஒரு வகை வைரஸ் கிருமிகளால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.

சிலருக்கு தலைவலி, காய்ச்சல், சோர்வு, தொண்டை வலி போன்றவை அறிகுறியாக ஏற்படும். இதனுடன் படர்தாமரை போல் தோலில் பாதிப்பும் ஏற்பட்டிருக்கும். இவை மார்பு, அடிவயிறு, இடுப்பு, பின்பகுதி போன்ற பகுதியில் ஏற்பட்டிருக்கும். இந்தப் படர்தாமரை போன்ற பாதிப்பு ஏற்பட்டு, ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பிறகு முழுவதும் பருக்கள் போன்ற சின்ன கொப்புளங்கள் ஏற்படும். இவை அடர் பிங்க் வண்ணமாக இருக்கும்.‌ இதனை உறுதிப்படுத்திக் கொள்ள பிரத்யேக பரிசோதனை ஏதும் இல்லை என்றாலும், இதனை மருத்துவர்கள் தங்களது கண்களால் பார்வையிட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

4 முதல் 6 வார கால கட்டத்திற்குள் இவை தானாகவே குணமடையும். சிலருக்கு இரண்டு மாதங்கள் வரை இத்தகைய பாதிப்பு நீடித்திருக்க கூடும். இதன்போது ஏற்படும் அதிக அளவிலான அரிப்பை கட்டுப்படுத்துவதற்கான மருந்து மற்றும் மாத்திரைகளை களிம்புகளையும் மருத்துவர்கள் வழங்கி முழுமையான நிவாரணம் வழங்குவர். சிலருக்கு லைட் தெரபி எனப்படும் சிகிச்சையை வழங்கி குணப்படுத்துவர். இதன்போது இயற்கையான சூரிய ஒளி அல்லது அதே போன்ற வெப்பத்துடன் கூடிய செயற்கை ஒளியை தோல் மீது செலுத்தி இதற்கு முழுமையான நிவாரண சிகிச்சையை மேற் கொள்வர்.

டாக்டர்.தீப்தி
தொகுப்பு: அனுஷா

 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top