சொரியாசிஸ் பாதிப்பை வராமல் தடுக்கும் உணவு முறை!

சொரியாசிஸ் பாதிப்பை வராமல் தடுக்கும் உணவு முறை!

இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களது நாளாந்த உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சொரியாசிஸ் மற்றும் சொரியாக்டிக் ஓர்த்ரைடீஸ் போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க உணவு முறையை சத்துள்ள சமவிகித உணவு முறையை பின்பற்றினால், இதன் பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

எம்மில் பலரும் ஆரோக்கியமான உணவிற்கு முன்னுரிமை வழங்காமல், சுவைக்கு முன்னுரிமை அளித்து சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை விரும்பி, அகால வேலைகளிலும் சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் செரிமான மண்டலத்தில், ஜீரணத்திற்கு உதவி புரியும் நுண்ணுயிர்களின் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை உண்டாகிறது. இதன் காரணமாக சொரியாசிஸ் எனப்படும் தோல் அழற்சி பாதிப்புக்குள்ளாகிறார்கள். சொரியாசிஸ் என்ற பாதிப்புக்கு உள்ளானவர்களின் 30 சதவீதத்தினர் சொரிட்டிக் ஓர்த்ரடீஸ் எனப்படும் பாதிப்புக்கும் முகம் கொடுக்கிறார்கள். இதனால் காலையில் எழுந்தவுடன் கால் மற்றும் பல இடங்களில் உள்ள மூட்டுக்களில் நெகிழ்வுத்தன்மை ஏற்படாமல் விறைத்து கொள்கிறது. இதன் காரணமாக சோர்வு மற்றும் கை கால் விரல்களில் வீக்கம், மூட்டு வலி, நகங்களில் திடீர் மாற்றம் போன்றவை ஏற்படுகிறது.
 
இதனை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்துவதை விட, ஆரோக்கியமான சத்தான மேற்கத்திய உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் இதனை முழுமையாக கட்டுப்படுத்தலாம். மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்படி தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவு முறையை முறையாக பின்பற்றினால், இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம் என மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.
 
டாக்டர். ஸ்ரீதேவி
தொகுப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top