Small Fibre Neuropathy என்ற பாதிப்பிற்குரிய பரிசோதனை

Small Fibre Neuropathy என்ற பாதிப்பிற்குரிய பரிசோதனை

இன்றைய தேதியில் எம்மில் சிலருக்கு பாதங்களில் எரிச்சல், கூசும் உணர்வு, குத்துதல் போன்ற உணர்வு, உணர்வின்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் இவைகள் ஸ்மால் ஃபைபர் நியூரோபதி என்ற நரம்பியல் கோளாறுகளுக்கான அறிகுறிகளாக எடுத்துக்கொண்டு உடனடியாக பரிசோதனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளுக்கும், ஏனைய பெண்களில் 50 சதவீதத்தினருக்கு மேல் பாதங்களில் எரிச்சல், குத்துதல் போன்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு இதன் காரணமாக தற்காலிகமாக வலி ஏற்படக்கூடும். இவை அனைத்தும் நரம்பியல் கோளாறுகள் என வகைப்படுத்தப்படுகிறது. அத்துடன் peripheral neuropathy எனப்படும் நரம்பியல் கோளாறின் ஒரு பிரிவாகவும் இதனை மருத்துவர்கள் வரையறை படுத்துகிறார்கள். மூளை மற்றும் முதுகுத்தண்டைத் தவிர புறப்பகுதியில் இயங்கும் நரம்புகளில் ஏற்படும் இடையூறுகள் ஸ்மால் ஃபைபர் நியூரோபதி என மருத்துவர்கள் வகைப்படுத்துகிறார்கள்.
 
இத்தகைய பாதிப்பிற்கு உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், சிறிய அளவிலான நரம்புகளின் செயல்பாட்டில் தடைகள் ஏற்பட்டு மலச்சிக்கல், வறண்ட கண்கள், வறண்ட உதடுகள், சோர்வு, தோலில் நிற மாற்றம், வியர்வை வெளியேறுவதில் சமச்சீரற்ற தன்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, மன நலத்தையும் பாதிக்கும்.
 
ரத்த சர்க்கரையின் அளவை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்தி, பேணிக்காப்பதில் தான் இதற்கான முழுமையான நிவாரணத்தை பெற முடியும்.
 
மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் ஒன்று இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் nerve conduction test மற்றும் electromyography ஆகிய இரண்டு பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள். வெகு சிலருக்கு மட்டுமே ஸ்கின் பயாப்ஸி எனப்படும் தோலிலுள்ள திசுக்களை பரிசோதனைக்காக எடுத்து அதனை ஆய்வு செய்து பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள். மிகச் சிலருக்கு Quantitative Sudomotor Axon Reflex Testing என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள்.
 
டாக்டர்.கோட்டீஸ்வரன்
தொகுப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top