பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை Dr.G.M.பரத்குமார்

பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை Dr.G.M.பரத்குமார்

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த சிகிச்சையை இந்தியாவிலேயே செய்யக் கூடிய நான்கு அல்லது ஐந்து பேரில் ஒருவரான, ஈஸ்வரா மருத்துவமனையைச் சேர்ந்த Dr.G.M.பரத்குமார் இச்சிகிச்சை பற்றி விளக்குகிறார்.
 
பகுதி மூட்டு மாற்று சிகிச்சை பற்றிப் பார்ப்பதற்கு முன் அது யாருக்கு, ஏன் தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். “மூட்டுகளில் உட்பகுதி, வெளிப்பகுதி என இரு பகுதிகள் உண்டு. அவற்றில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உட்பகுதி தேய்மானத்துக்கு இலக்காகிறது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களில் எண்பது சதவீதமானோரின் மூட்டுக்களில் தேய்மானம் ஏற்பட்டுவிடும். இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தீர்களானால், போஷாக்கு நிறைந்த உணவுகளை போதியளவு உட்கொள்ளாமல் விடுவது மற்றும் மூட்டுகளைத் தவறான முறையில் பயன்படுத்துவது அல்லது போதியளவு பயன்படுத்தாமல் விடுவது என்பனவே!
 
ஒரே இடத்தில், ஒரே மாதிரி நீண்ட நேரம் அமர்ந்தி ருப்பது, நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வது என்பனவே பெரும்பாலானவர்கள் மூட்டு தேய்மானத்துக்கு முகங்கொடுக்கக் காரணம். மூட்டுத் தேய்மானத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், மூட்டு மாற்றுவரை செல்லாது மருந்துகள், உடற்பயிற்சிகள் மூலம் சரி செய்ய முயற்சிக்கலாம். ஆனால், அதை அவ்வளவு இலகுவாக யாரும் இனங்காண்பதில்லை என்பதாலேயே, பெரும்பாலா னோருக்கு மூட்டு மாற்று தவிர்க்கப்பட முடியாததாகி விடுகிறது.
 
மூட்டுத் தேய்மானத்துக்கு உள்ளாவோரின் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்படும். அதாவது, தமது சஞ்சாரத்தை படிப்படியாகக் குறைத்துக்கொள்வார்கள். கடைசியில், ஒரே இடத்தில் உட்கார்ந்தே விடுவார்கள். இப்படியானவர்களுக்கு வரப்பிரசாதமாக உருவானது தான் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை. அதன் அடுத்த கட்டமே பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!
 
முழங்கால் மூட்டுத் தேய்மானத்தில் மூன்றுவித நிலைகள் உண்டு. அவற்றை எக்ஸ்-ரே மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஆரம்ப நிலையில் உள்ளவர்களது மூட்டுக் களின் இருபுறமும் காணப்படவேண்டிய இடைவெளி கள் சமமாகவே இருக்கும். ஆனால் இவர்களுக்கு, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போதோ, மாடிப் படிகளில் ஏறி இறங்கும்போதோ சற்று வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள்.
 
பெரும்பாலும் இவ்வாறானவர்களின் மூட்டுக் களில், அதிர்வைத் தாங்கும் ‘மினிஸ்கஸ்’ எனப்படும் சவ்வு கிழிந்திருக்கும். அதை, நுண்துளை சிகிச்சை மூலம் கண்டறிந்து சரிசெய்துவிட் டால், அது அடுத்த நிலைக் குச் செல்லாமல் தடுக்க முடி யும்.
இரண்டாவது நிலையில், மூட்டுக்களின் உட்பகுதி முழுமையாகத் தேய்வடைந்திருக்கும். அவ்வாறு தேய்வடைந்திருக்கும் பகுதியை முற்றிலுமாக மாற்றுவதே பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை. அனேக சந்தர்ப் பங்களில் இந்த சிகிச்சையே நோயாளர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்து மூன்று வருடங்களே ஆகின்றன. என்றாலும், லண்டன் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில், கடந்த 35 வருடங்களாக இந்த சிகிச்சை முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.
 
இந்த சிகிச்சைகள் மூலம் நோயாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பல! முதலில், தேய்வடைந்திருக்கும் பகுதியை மட்டுமே மாற்றப் போகிறோம் என்பதால், மூட்டின் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதனால், சிகிச்சையின்பின் அவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். தரையில் சம்மணமிட்டு அமர்வது, படிகள் ஏறி இறங்குவது, இந்திய முறைப்படியான கழிவறையைப் பயன்படுத்துவது என்று அனைத்தையுமே இவர்கள் செய்யலாம்.
 
மிகச்சிறிய கருவிகளைப் பயன்படுத்தியே இந்த சிகிச்சை செய்யப்படுகிறது என்பதால் தழும்புகள் விகாரமாகத் தெரியாது. சுமார் 5 அல்லது 6 சென்டி மீட்டர் அளவுள்ள துளைகள் மட்டுமே போடப்படும் என்பதால், அது பார்ப்பவர்கள் கண்ணுக்குத் தெரியும் சந்தர்ப்பங்கள் குறைவு.
 
முழுமையான மூட்டுச் சவ்வும் பாதிக்கப்படுவதே மூன்றாவது நிலை எனப்படும். இதன்போது, பாதிக்கப்பட்ட மூட்டுப்பகுதி முழுமையாக மாற்றப்படவேண்டியிருக்கிறது. இதன்போது படி ஏறி இறங்குவது, கால்களை 90 பாகை அளவுக்கு மடக்குவது தவிர, நிலத்தில் அமர்வதோ, சப்பணமிடுவதோ முடியாது.  செயற்கை மூட்டு பொருத்தப்பட்டிருப்பதால், நம்முடைய இயல்பு வாழ்க்கையை வாழ மனரீதியாகவும் ஒரு நிரந்தர அச்சத்தை ஏற்படுத்திவிடும்.
 
மூன்றாவது நிலை மூட்டுத் தேய்மானத்துக்கு ஆளானவர்கள் சிலர், மாற்று மருத்துவ முறை சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் மிகச் சிலருக்கு ஓரளவு பயன் இருந்தாலும், பெரியளவில் இது குணமளிப்பதில்லை. அப்படி குணமளித்திருந்தால், இன்று அனேகர் அந்த மருத்துவத்துறையை நோக்கிச் சென்றிருப்பார்கள். ஆனால் இன்னும் ஆங்கில மருத்துவத்தையே மூட்டுத் தேய்மானத்துக்கு உள்ளானவர்கள் தேடி வருவது, ஆங்கில மருத்துவ சிகிச்சைகளின் பயனை நிரூபிக்கிறது.
 
மூட்டுத் தேய்மானம் ஒரே நாளில் ஏற்பட்டு விடுவதல்ல! சுமார் எட்டு முதல் பத்து ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகவே மினிஸ்கஸ் சவ்வை முழுமையாகப் பாதித்துவிடுகிறது. எனவே, ஏதாவது ஒரு காரணத்தால், மினிஸ்கஸ் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனே மருத்துவரை நாடினால் முழுமையான மூட்டு மாற்றை முற்றாகத் தவிர்க்க முடியும்.
 
சிலர், கால்சியம் குறைபாடே மூட்டுத் தேய்மானத்துக்குக் காரணம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது முழுக்க முழுக்கத் தவறானது. குருத்தெலும்பைச் சுற்றியுள்ள தோல் போன்ற தசை முழுமையாக அழிந்து, எலும்புகள் ஒன்றோடொன்று உராய்ந்து தேய்வடைவதே மூட்டுத் தேய்மானம்! இதற் கும், கால்சியம் குறைபாட் டுக்கும் சம்பந்தமில்லை என் பதே நிதர்சனமான உண்மை!
 
இன்றைய நவீன மருத் துவ விஞ்ஞான சிகிச்சைகள் அடிப்படையில், முழுமை யான மூட்டுத் தேய்மானத் துக்கு உள்ளானவர்களில் அறுபது முதல் எழுபது சதவீதமானோர், பகுதி மூட்டு மாற்று சிகிச்சை மூலமே குணம் பெற முடி யும் என்பது குறிப்பிடத்தக் கது. ஆனால், மிகச் சரியான மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். ஏனென்றால், நோயாளிக்கு இது எளிமையான சிகிச்சை என்றாலும், அதைச் செய்யும் மருத்துவருக்கு இது மிக மிக நுட்பமானதும், சிக்கலானது மான சிகிச்சையாகும். எனவே, அதில் சிறந்தவர் களிடம் மட்டுமே சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
பாதிக்கப்பட்ட மூட்டுச் சவ்வுப் பகுதி மட்டுமே மாற் றப்படுவதால், இந்த சிகிச் சையைப் பெற்றுக்கொண்ட மறுநாளே மூட்டு வலி பறந்துவிடும். அடுத்தடுத்த நாட்களில் நோயாளி தரை யில் சர்வ சாதாரணமாக உட் கார்ந்து எழுந்திருக்க முடி யும். சிகிச்சைக்குப் பின், எந்த வித இயன்முறைப் பயிற்சி கள் எதுவும் இல்லாமல், முன் போலவே இயங்க ஆரம் பிக்கலாம்.
 
இந்த பகுதி மூட்டு மாற்று சிகிச்சையின்போது இரத்த இழப்பு மிகக்குறைவு. பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனைத்துமே நவீன மயமானது என்பதால், மிகக் குறைவான மருத்துவர்களே - இந்தியாவில் மூன்று அல்லது நான்கு மருத்துவர்களே - இந்த சிகிச்சையைச் செய்ய முடிகிறது.

Tags: News, Madurai News, Art and Culture, Academy

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top