விரல் நுனியில் உலகளாவிய தகவல் தரும் World Book!

விரல் நுனியில் உலகளாவிய தகவல் தரும் World Book!

1917-ம் ஆண்டு சிக்காகோவில் "The World Book Encyclopedia" என்கிற பெயரில் முதல் பிரதியாக வெளிவந்தது இந்த புத்தகம் இன்றுவரை பெரும்பாலான பாடபுத்தகத்திற்கும் பல ஆராய்ச்சி கட்டுரைகளுக்கும் reference. காலம் உருண்டோட மக்களின் தேவைக்கும் ட்ரெண்டிற்கும் ஏற்றபடி தன்னை மெருகேற்றிக் கொண்ட world book அவர்களின் நூற்றாண்டில் டிஜிட்டல் மூலமாக நம்மிடம் சேர்கிறது.
 
இன்று நம்மைவிட நம்முடைய குழந்தைகள் பயங்கர ஸ்மார்ட். பெரும்பாலான வீடுகளிலேயே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் கணிணி மற்றும் ஸ்மார்ட் போன் சந்தேகங்களை கேட்டு தெரிந்துக்கொள்கிறார்கள். ஸ்மார்டானவர்களுக்கு ஸ்மார்ட்டான முறைதான் சரி என, இன்று world book முற்றிலும் புதிய கற்றல் முறையில் களமிறங்கியுள்ளது. அதுதான் world book online portal.
 
முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் வண்ணப்படங்களுடன் கூடிய இருபத்தி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள், பத்தாயிரம் இ-புத்தகம் என அடிக்கிக் கொண்டேபோகும் அளவான சர்வதேச தர களஞ்சியமாக திகழ்கிறது இந்த Online world book. உலகநாடுகளைப் பொருத்தவரையில் இந்தியாதான் கல்விக்காக அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. இதனால் நகர்புறம் மற்றும் கிராமப்புற மாணவர்கள் என அனைவருக்கும் கல்வியை சேர்க்க வேண்டுமென இந்தியாவில் இதை சேர்க்க மாணவர்களுக்கு அதிகமான சலுகையை அளிக்கிறது world book. இதை இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா போன்ற நாடுகளின் world book நிறுவனத்தின் அங்கீகரிக்கப் பட்ட ஒருங்கிணைப்பாளராக மதுரையின் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
 
இந்த world book online பற்றி விவரமாக அறிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் திரு. செந்தில் அவர்களிடம் கேட்டபொழுது: ‘என்னுடைய பள்ளி நாட்களில் அதிகமாக ஆர்வத்துடன் encyclopedia புத்தகத்தை புரட்டுவதுண்டு. அதில் உள்ள படங்களே நமக்கு பாடங்களை எளிதில் கற்றுக்கொடுக்கும். அந்தளவிற்கு அறிவியல், மருத்துவம், வேதியியல், இயற்பியல், புவியியல் என அனைத்து துறைகளையும் அ முதல் ஃ வரை விளக்கத்தோடு அளித்திருப்பார்கள். இன்றும் நமக்கு எந்த ஒரு சந்தேகமானாலும் கூகுளில் தேடுகிறோம். அது நமக்கு encyclopedia-வின் சான்றுகளை அளிக்கிறது. தற்போது இந்த World Book Encyclopedia வானது இந்த 2017-ம் ஆண்டு தம்முடைய நூறாவது ஆண்டில் இருக்கிறது. இதனால் உலகத்தின் அனைத்து தகவல்களையில் விரல்நுணியில் அளித்திட உலகில் உள்ள பல்வேறு பள்ளிகளோடு ஒப்பந்தம் செய்து உறுப்பினர்களாக்கிக் கொள்கிறது. இவர்களை இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் மலேசியாவில் பள்ளிகளோடு இணைக்கும் ஒரு பாலமாக எங்களின் கல்வி நிறுவனம் இருக்கிறது.
 
இவர்கள் சர்வதேச தரத்திலான இ-நூலகம் ஏற்படுத்தி, டிஜிட்டல் உள்ளடக்கங்களுடன் நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர். அதாவது மூன்று முதல் ஏழு வயது, ஏழு வயது முதல் பதினொரு வயது, பதினொரு முதல் பதினெட்டு வயது, பதினெட்டுக்கு மேல் உள் ளோர். அதில் Early World of Learning, Kids, Student, Discover, Advanced, Dramatic Learning, Activity Corner, Digital Library, Hispánica Saber, L'Encyclopédie Découverte, Early peoples, Invention and discoveries, Living Green, Timelines, Science Power, Social Studies Power, Kids eLearn, Ebooks போன்ற பேக்கேஜ்கள் அந்தந்த வயதோருக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது.
 
மேலும், ஒரு பள்ளி World Book-கின் உறுப்பினரானால் இணைந்தால் அந்த பள்ளியின் பெயர் World Book இணையதளத்தில் இடம்பெறுவதோடு, மாணவர்கள் அனைவருக்கும் தனி Login வழங்கப்படும். இதனால் அவரவர் தங்களின் இல்லங்களிலேயே இணையதளம் மூலம் சுமார் 156 மொழிகளில் கற்றுக்கொள்ளலாம். மேலும், அனைத்து மாணவர்களுக்கும் World book நேரடி சான்றிதழும் வழங்குகிறது.
 
தற்போது இதை அனைவரிடமும் எடுத்துச்செல்ல வேண்டுமென்கிற ஒரு நோக்கத்தோடு நர்சரி தொடங்கி ஐசிஎஸ்சி பள்ளிகள் வரை இலவச டெமோ ஏற்பாடு செய்துக் கொடுக்கிறோம்.
 
மேலும் தகவல் அறிய 9894611222, 9597082690, 9597082691  என்கிற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags: News, Lifestyle, Academy, Institute, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top