ஸ்ரீவி. பல்கலையில் சர்வதேச கணினி மற்றும் தனி கணித ஆராய்ச்சியாளர்கள் மாநாடு

ஸ்ரீவி.  பல்கலையில் சர்வதேச கணினி மற்றும் தனி கணித ஆராய்ச்சியாளர்கள் மாநாடு

ஸ்ரீவி. கலசலிங்கம் பல் கலையில், தேசிய தனி கணித ஆராய்ச்சி மையம் சார்பில் அமெரிக்கா பால் ஸ்டேட் பல்கலைக்கழகம், இந்தியானா - புர்டுயூ பல் கலைக்கழகம் ஆகியவற்று டன் இணைந்து ‘கணினி மற் றும் தனிக் கணித ஆராய்ச்சி வளர்ச்சி’ பற்றி 3 நாள் சர்வ தேச மாநாடு துவக்கவிழா கலசலிங்கம் பல்கலை இயக் குநர் முனைவர் எஸ். சசி ஆனந்த் தலைமையில் நடை பெற்றது.

கலசலிங்கம் பல்கலை யில் உள்ள தேசிய கணித ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் எஸ்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். பல்கலை இயக்குநர், முனைவர் எஸ். சசிஆனந்த் பேசுகையில், பாரதப் பிரத மரின் அறிவுறுத்தலிபடி இந்தியாவில் அனைத்துப் பொருட்களும் உற்பத்தி செய்யவேண்டும். இந்தியா வில் முழுமையாக டிஜிட்டல் முறையைப் பயன்படுத்த வேண்டும் என்ற இரண்டு திட்டங்களின் அடிப்படையில், கலசலிங்கம் பல்கலை யில் ஆராய்ச்சிகள், புராஜக்ட்கள், பலவற்றில், மாணவர்களுடன் ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஈடு பட்டுவருகின்றனர்.

மேலும், இங்குள்ள ராமன்-கிருஷ்ணன் சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் புதிய பொருட்கள் உற்பத்தி செய்வ தற்கும், அதனை மக்களுக் குப் பயன்படும் வகையில் விநியோகம் செய்வதற்கும், சர்வதேச அளவில் ‘நெட் ஒர்க் கிங்’ அடிப்படையில் ஆரா ய்ச்சிகள் மேற் கொண்டு, தற்பொழுது பல பொருட் களுக்கு காப்புரிமை பெற்று வருவதாகக் கூறினார். அமெரிக்கா இந்தியானா -புர்டுயூ பல்கலை ஆராய்ச்சி வல்லுநர் முனைவர் எல். டபிள்யூ பெனிக்கி, அமெரிக்க பால் ஸ்டேட் பல் கலை ஆராய்ச்சியாளர் ஜெய் பாகா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

அமெரிக்கா பால் ஸ்டேட் பல்கலைக்கழகத்திற்கும், கலசலிங்கம் பல்கலைக் கழகத்திற்கும், இணைந்து ஆரா ய்ச்சி செய்வதற்காகவும் மாணவர்கள் ஒரு பருவம் அமெரிக்கா சென்று படிப்பதற்கும் திட்டம் மேற் கொண்டு புரிந்துணர்வு ஒப் பந்தம் கையெழுத்தானது.

மேலும், அமெரிக்கா இந் தியானா - புர்டுயூ பல்கலையும், கலசலிங்கம் பல்கலையும் இணைந்து பேராசிரியர்கள் அமெரிக்கா சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் மற்றும் அமெரிக்க பல்கலை தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

அமெரிக்க பல்கலை ஆராய்ச்சியாளர், முனைவர் பெனிக்கி பேசுகையில், இன்று உலக அளவில் கணினித்துறை வளர்ச்சிதான் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் தனிக்கணித ஆராய்ச்சியின் பங்குதான் கணினி ஆராய்ச்சி வளர்ச்சிக்கு அடிப்படை தேவையாகும். எனவே இந்த மாநாட்டில் கணினித்துறையின் அபார வளர்ச்சிக்கு தேவையான புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை 3 நாட்களில் சமர்பிக்கப்படும். என்று கூறினார்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள் உலகப்புகழ்பெற்ற எல்ஸ்வேர் புத்தகப்பதிப்புகளில் பிரசுரம் செய்யப்படும் என்று தேசிய கணித ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் ஆறுமுகம் தெரிவித்தார்.

மேலும், புருஸ் வாட்சன் - சவுத் ஆப்பிரிக்கர், ஜோசப் சிரன்- சுலோவகியா : டுமினி யக் ஹாக்டன்- யு எஸ். ஏ: கிகி அரியாண்டி சுகங் - இந்தோனேஸியா: பிட்டர் கோவர் - செஸ் ரிபப்லிக்; செயது அலிகாணி ஈரான்: கிரன் புடானி அமெரிக்கா,: சோனா பவ்டடிகோவா ஸ்லோவாகியா: ஜி எல் சியா- மலேசியா: எ. விஜய குமார் - இந்தியா: ரினோ வியா - இந்தோனேஷியா: புர்ணிமாக குப்தா - இந்தியா: பி. எஸ். பான்டா - இந்தியா, எல்.சுனில் சந்திரன் - இந்தியா: ஆர். பால கிருஷ்ணன் இந்தியா : டி. சிங் - இந்தியா, கே. ஜி. சுப்ரமணியன்- இந்தியா : வெங்கடேஷ்ரா மன் - இந்தியா : என். எஸ். நாராயணசாமி - இந்தியா, பி. டியூஸ் - இந்தியா, டி. கார்த்திக் - இந்தியா, எஸ். பிரன்ஸிஸ் ராஜ் - இந்தியா, எஸ். எஸ். சேன், இந்தியா, எஸ். கே. உதயகுமார். ஆகியோர் வருகைதந்து கட்டுரைகளை சமர்பித்தனர்.

பல்கலை துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மொத்தம் 20 நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், இந்தியா ஆராய்ச்சியாளர்கள் 40 பேர், பேராசிரியர்கள், டீன்கள், துறைத் தலைவர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் முனைவர் பால்ராஜ் நன்றிகூறினார். கலசலிங்கம் பல்கலை தேசிய ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் வல்லுநர்கள் கணிதத்துறை பேராசிரியர்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Tags: News, Lifestyle, Art and Culture, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top