கண்ணெனத்தகும் கல்வியின் மாண்பினை ஓங்கி உயர்த்திடும் பாரத்வித்யா மந்திர்!

கண்ணெனத்தகும் கல்வியின் மாண்பினை ஓங்கி உயர்த்திடும் பாரத்வித்யா மந்திர்!

தெய்வப்புலவராம் திருவள்ளுவப்பெருந்தகை கல்வியின் பெருமையைச் செப்புமிடத்து, “மனிதருக்குக் கல்வி கண்ணினைப் போன்றது” என்கின்றார். அத்தகைய பெருமைமிக்க கல்வியைக் கல்லாதவர் இரு கண்ணற்ற குருடரை ஒத்தவராவார் என்றும் கூறுகின்றார். மனிதனை முழுமையாக்கும் கல்வியை எந்தப்பாடசாலையில் ஆரம்பிப்பது என்பது தான் இப்போதைய பெற்றோர் மாணவர்களின் தலையாய பிரச்சினையாகும்.

அன்புடன் கூடிய அரவணைப்பு, பண்பான குணங்களை பாசத்துடன் புகட்டிடும் பாங்கு, தரணிபோற்றும் தகைசால்கல்வியை தரமுடன் கற்றுத்தருவது ஆகிய அற்புதங்களுடன் ஒரு “கல்விக்கூடம்” அமைந்துவிட்டால் அதை விட சிறப்பானது மாணவர்களுக்கு ஏதுமில்லை. இந்த நல்ல எதிர்பார்ப்புகள் எல்லாமும் ஒருங்கே அமையப் பெற்றதுதான் மதுரை ஐயர்பங்களா பகுதியில் காவேரி முதல் தெருவில் இயங்கி வரும் பாரத் வித்யா மந்திர் என்பதை அறிந்து, பள்ளி பற்றிய முழுமையான விபரங்களைச் சேகரிக்க பள்ளியின் முதல்வர் திரு.எம்.செல்வகுமார் அவர்களைச் சந்தித்தோம்.

பெற்றோரின் இன்றைய தேடுதலின் சிறந்த முடிவாக கிடைத்திருப்பதுதான் ஐயர்பங்களா பகுதியில் இயங்கிவரும் பாரத் வித்யா மந்திர் மெடரிக் பள்ளி. இப்பள்ளி, 1990-ல் துவங்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்சச்சியை அளித்து வருகின்றது. “எங்களுடைய பள்ளியைப் பொருத்தவரையில் சிறப்பான மற்றும் தரமான கல்வியளிப்பது ஒரு மிக முக்கிய விஷயமாக இருந்தாலும் அதை எப்படி அளிக்கிறோம் என்பதையே நாங்கள் மையமாக கொண்டுள்ளோம்.

மாணவர்களை திட்டி, அவர்களை அடித்து பாடம் கற்பித்தால் அது அவர்களுக்கு படிப்பின் மீதும் ஆசிரியர் மீதும் ஒரு வெறுப்பினை மட்டுமே உண்டாக்கும். அன்பால், யாரை வேண்டுமானாலும் நாம் மாற்றலாம் என்னும் யுக்தியை கையாளத்தொடங்கினோம். குழந்தைகள் தவறுசெய்வது இயல்பு, எது நன்மை, எது தீமை என்பதை அறியாமல் இருப்பதால்தான் அவர்களை நாம் குழந்தை என்கிறோம். நாம் தான் அவர்களுக்கு நன்மை, தீமை குறித்து போதித்து நல்வழிப்படுத்த வேண்டும்.

இதற்காகவே, மிகவும் கைத்தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு எங்கள் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அக்கறையளிக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அத்தோடு சில குழந்தைகள் அதிக விளையாட்டுத்தனத்தோடு, ஹைப்பர் ஆக்டிவாகாக இருப்பார்கள். அத்தகைய குழந்தைகளை சில பள்ளிகளில் தங்களால் கவனித்துக் கொள்ள இயலாது.

இதனால் குறிப்பிட்ட பள்ளியினால், 100 சதவீத தேர்ச்சியளிக்க முடியாது. எனவே அக்குழந்தைகளை 9-ம் வகுப்பு முடித்தவுடன் டிசி கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அத்தோடு இன்னும் சில குழந்தைகள், சில பயத்தாலும், குடும்ப சூழலினாலும் சரியாக பள்ளிக்கு வராமல் இருப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு இங்கு இடமளித்து அவர்களுக்கு சரியான கலந்தாய்வு அளித்து, அவர்களுக்கு படிப்பின்மீது ஒரு பிடித்தம் வரவழைத்து, ஒழுக்கத்தையும் நன்னடத்தையையும் வளர்த்து, சிறப்பான முறையில் தேர்ச்சிப்பெற செய்திருக்கிறோம்.

மேலும் சற்று மனநலம் குன்றி மற்றும் டிஸ்லக்சியா உள்ள குழந்தைகளை, எங்களின் பள்ளியில் அனுமதித்து அவர்களுக்கு படிப்பில் சில சலுகைகளைப் பெரும் வகையில், அரசாங்கத்தில் சான்றிதழ்கள் கிடைக்க செய்து அம்மாணவர்களுக்கும் சிறப்பான பயிற்சிகள் அளித்து தேர்ச்சிப் பெற செய்துள்ளோம். இங்கு பிரத்யேகமாக மாரல் என்று வழங்கப்படும் நல்ல நடத்தைகளைப் போதிக்கும் புத்தகத்தை ஒரு பாடமாக வைத்து கற்பிக்கிறோம். அத்தோடு ஸ்போக்கன் இங்கிலீஸிற்கும் முக்கியத்துவம் அளித்து அதற்கென பிரத்யேக ஆசிரியரை பணியமர்த்தி கற்பிக்கிறோம்.

Tags: News, Lifestyle, Institute, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top