உடலின் கொழுப்புகளை கரைக்க உதவும் கஞ்சி!

உடலின் கொழுப்புகளை கரைக்க உதவும் கஞ்சி!

இந்திய முறைகளில் மட்டுமல்ல, பண்டைய காலத்து கிரேக்க முறைகளிலும் கூட கஞ்சி ஒரு மிக முக்கியமான உணவு பொருளாக இருந்துள்ளது. விவசாயிகளின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி. கஞ்சிக்குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை. ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி மிக முக்கியமான பானம் ஆகும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் பெருமளவு உதவுகிறது.

இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தவன் கூட ஒரு டம்ளர் கம்மங்கஞ்சி குடித்தால் சுறுசுறுப்பாகி விடுவான். பருவமடைந்த பெண்களுக்கு உளுத்தங்கஞ்சி கொடுக்க வேண்டும். இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

காய்ச்சல் வந்தால் வெறும் கஞ்சி கொடுத்தால் போதும் உடல் தானாக சுறுசுறுப்பாகிவிடும். தாய் பால் ஊட்ட முடியாத பெண்கள் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சத்து பெறும்.

வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்களுக்கு அரிசி அல்லது நொய்க்கஞ்சி கொடுப்பது நமது வழக்கமாக இருந்து வந்தது. கஞ்சி வெறும் உணவல்ல மருந்தும் கூட.

கஞ்சியில் உள்ள நார்ச்சத்து மலமிளக்க பிரச்சனைகளை தீர்க்கும். செரிமான மண்டலத்தை வலுவாக்கும். மலச்சிக்கல் இல்லாமல் நிம்மதியை காலைக்கடன் கழிக்க உதவும்.

வயிற்றுபோக்கு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து கஞ்சித்தண்ணி தான். இதை மருத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர்.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top