மதுரையிலும் செயல்படும் ‘டப்பாவாலா’ வசதி!

மதுரையிலும் செயல்படும் ‘டப்பாவாலா’ வசதி!

‘என்னதான் ஊருக்கு பல ஹோட்டல்களும் கேண்டீன்களும் இருந்தாலும் வீட்டுசமையலின் ருசி என்பது தனித்தன்மை வாய்ந்தது. இன்று பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் சொந்த ஊர்களைவிட்டு வெளி ஊர்களுக்கு சென்று பணியாற்றுகிறார்கள். தற்போது நம்முடைய மதுரையில் பிரபலமான பல ஐடி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதனால் தென்தமிழகத்தைச்சார்ந்த பலர் சென்னை, பெங்களுரூ போன்ற நகரங்களை தேர்வு செய்யாமல் மதுரையை தேர்வுசெய்து வேலை பார்க்கிறார்கள். 

சிறுவயதிலிருந்தே வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டே வளர்ந்தவர்கள் திடீரென ஹோட்டலில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரு சில உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.’ என்கிறார் திரு. செந்தில் குமார் அவர்கள்.

வீட்டில் செய்யப்படும் உணவுகளில் கிடைக்கும் ஆரோக்கியம் வெளியில் சாப்பிடும் உணவுகளில் கிடைப்பதில்லை. இதனை முன்நிறுத்திதான் வீட்டு உணவுகளை கார்ப்பரேட் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களிடம் கொண்டு சேர்க்கிறார் இவர், இதைப்பற்றி மேலும் அவரிடம் கேட்டபொழுது:

‘வெளியூர்களிலிருந்து வேலைக்கு வருபவர்களுக்கு முக்கியப்பிரச்சனைகளில் ஒன்று என்னவென்றால் அது சாப்பாட்டு பிரச்சனைதான். கிடைக்கும் ஏதோ ஒரு உணவை சாப்பிடுவது, சரியான நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது போன்றவைகள் பல உடல் உபாதைகளை ஏறபடுத்திவிடுகிறது. அப்போதுதான் இந்த ஐடியா எனக்கு தோன்றியது, அதுதான் டோர் டெலிவரியில் வீட்டு சாப்பாடு.

கார்ப்பரேட் மற்றும் ஐடி நிறுவனங்களில் வீடுகளைவிட்டு வந்து வெளியூர்களில் பலரும் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அன்றாடம் ஹோட்டல்களில்தான் சாப்பிட வேண்டியதாக உள்ளது. அவர்களுக்காக வீட்டிலேயே தயார்செய்து வீட்டு சாப்பாடை 60 ரூபாயில் இலவச டெலிவரியில் தயார்செய்து கொடுக்கிறோம். இதில் 50 கிராம் சாதம், 100 மிலி சாம்பார், 100 மிலி ரசம், 100 மிலி மோர், தினசரி வெவ்வேறு வகையான கீரை, அப்பளம் மற்றும் ஊறுகாய் கொடுக்கிறோம். இதில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் சாம்பாரும் மீதி நாட்களில் மோர் குழம்பு, வத்தக்குழம்பு, குருமா போன்றவற்றை கொடுக்கிறோம்.

இந்த உணவுகளை திருநகரில் தயாரித்து அலுமினியம் பாஃயில் கவர்களில் பேக்கிங் செய்து காலை 11:30 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணிக்குள் பெரியார் பேருந்து நிலையம், அண்ணா நகர், கே.கே.நகரைத் தொடர்ந்து காளவாசலில் டெலிவரியை முடிக்கிறோம். அதனைத்தொடர்ந்து இரவில் டின்னர்களும் இதுபோலவே தேவைப்படுவோருக்கு அன்றாடம் அளித்து வருகிறோம். கார்ப்பரேட், ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர் உணவு தேவை இருப்பின், எங்களை தொடர்பு கொண்டால், அன்றாடம் வந்து டெலிவரி செய்துவிடுவோம்.’ என கூறினார். Cell : 9940466402

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top