இளமையை மீட்டுத்தரும் பரதயோகா!

இளமையை மீட்டுத்தரும் பரதயோகா!

'அலங்கார உடை, அச்சுப் பிசகாத அபிநயம், பாவங்களை பிரதிபலிக்கும் முகம் மற்றும் உடல் பாகங்கள் என இசைக்கு தகப்படி உடல் மொழி அசைவில் நாம் பரதநாட்டியத்தை காணமுடிகிறது. இந்த நடனத்தின் மூலம் உடலும் மனதும் இணைந்து ஆரோக்கியமடைகிறது. மற்ற நடனங்களை விட பரதநாட்டியத்தில் வைக்கப்படும் முத்திரைகளும் யோகாவுடன் ஒத்தாகவே இருப்பதை பழங்கால சிற்பங்களில் நம்மால் காணகூடும்.

யோகாவில் யாமம், நியாமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்யஹாரம், தாரணம், தியானம் மற்றும் சமதி என எட்டு அடிப்படை கூறுகள் இருப்பதை நம்மால் உணரமுடியும். பரதநாட்டியம் மற்றும் யோகா இவ்விரண்டும் இணையும் போது நம்முடைய உடலில் நம்முடைய கற்பனைக்கும் எட்ட முடியாத விஷயங்களை நிகழத்திக் காட்ட முடியும், இதனைப் பற்றிய குறிப்புகளும் பரத சாஸ்திரத்தில் எழுதப்பட்டுள்ளது' என்கிறார் பரதயோகாவின் ஆசிரியர் திருமதி.ஐஸ்வர்யா அவர்கள்.

தமிழரின் ஆடல், பாடல் மற்றும் விளையாட்டினைப் பற்றிய தொகுப்புகளைக் கொண்டிருக்கும் நூல்தான் பரதசாஸ்திரம். இதில் கொடுக்க்பட்டுள்ள தொகுப்புகளில் பரதயோகாவைப் பற்றி பிரத்யேகமாக அறிய திருமதி.ஐஸ்வர்யாவின் உடையாடினோம்.

'அடிப்படையில் நான் ஒரு பரதநாட்டிய கலைஞர். என்னுடைய தாயார் கலைமாமணி முனைவர் பத்மா சுப்பிரமணியம் அவர்களிடமும், அவர்களின் சகோதரியிடமும் பரதநாட்டியம் கற்று பின் எனக்கு குருவாக திகழ்ந்தார். பரதநாட்டியம் பொருத்தவரை நம்முடைய உடலில் உள்ள வளைந்துக்கொடுக்கும் தன்மைதான் மிக முக்கியமானது. இதற்காக சிறு வயதுகளிலிருந்து பிரத்யேகமான சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த பயிற்சி யோகாவின் அடிப்படையில் 33 பயிற்சிகளை கொண்டிருக்கும். அன்றாடம் என்னுடைய பரதநாட்டிய வகுப்பு தொடங்கும் முன்னராக இந்த பயிற்சிகளை நாங்கள் மேற்கொள்வது மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் பொழுது நம்முடைய உடல் வளைந்துக் கொடுக்கும் தன்மை அதிகரிக்கும்.

அதுமட்டுமல்லாது அந்த பயிற்சிகள் அதற்கும் மேலான நன்மைகளை எற்படுத்துவதை என்னால் உணரமுடிந்தது. தற்போது இது பற்றியதான ஒரு ஆய்வினை மேற்கொண்டு என்னுடைய முனைவர் பட்டத்தை பெறவுள்ளேன். அந்த ஆய்வில் எனக்கு கிடைத்த ரிசல்ட் மிகவும் அற்புதமாக இருப்பதோடு இதன் பலனை தொடக்க நாளிலேயே நம்மால் காணமுடியும். மேலும், இது சாதாரண யோகா போல இல்லாமல் பரதநாட்டியத்தோடு இணைந்தமையால் இதில் கிடைக்கும் பலனும் பிசியோதெரபியைவிட வேகமானதாக இருக்கும்.

மேலும், இதை குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை யார்வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்த யோகாவை நாம் மூளை அதிகமான இரத்த ஓட்டத்தோடு மிகவும் சுறுசுறுப்பாக இயக்கும். எனவே, இதை மாலை 6:30 மணிக்கு மேல் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை.

நம்முடைய உடலுக்கு உடற்பயிற்சி எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு நாம் உண்ணக்கூடிய உணவும் மிக முக்கியமானது. உடல் எடை குறைக்க விரும்புவோர் முதலில் தங்களின் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற வேண்டும். வேறும் உடற்பயிற்சி மட்டுமல்லாது ஒரு சில உணவுப்பழக்கங்கள் இதற்கு கைக்கொடுக்கும்.

உதாரணத்திற்கு, இரண்டரை லிட்டரில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அது பாதியாக வற்றியவுடன் பட்டையை பொடி செய்து அத்தோடு மிளகு பொடி சேர்த்து ஆறவைக்க  வேண்டும். கைப்பொருக்கும் சூட்டில் இயற்கை தேனை ஒன்றறை தேகரண்டி - நான்கு தேக்கரண்டி, 1ஃ2 எலுமிச்சம்பழ சாறு எல்லாம் கலந்து ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதை நாம் நீர்pல் கலந்து, நாள் ஒன்றுக்கும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.  இது நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை நீக்கும். 

இரவு தூங்கப் போகும் முன்பு ஒரு டம்ளர் நீருடன் ஒரு பல் பூண்டும், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த நீரில் துளசிப் போட்டு குடித்தால் இதன் பலம் இரட்டிப்பாக இருக்கும். இந்த நீரைப் பருகி இந்த பரதயோகாவை செய்யும் போது, பெண்களின் மகப்பேறு மற்றும் உதிரப்போக்கு பிரச்சனை, தைராய்டு பிரச்சனை போன்றவை நீங்குகிறது.

இந்த பிரத்யேகமான யோகாவை தற்போது தல்லாகுளத்தில் உள்ள ஈஸ்வரா மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் நடத்தி வருகிறோம். பெரும்பாலும் இந்த யோகாவில் கிடைக்கும் பலனை நாம் மிக சீக்கிரத்தில் காண முடியும். அத்தோடு இந்த பரதயோகாவை நாம் செய்யும் பொழுது நம்முடைய உடலில் உள்ள இரத்த ஓட்டம் சீராவதுடன், நம்முடைய மூச்சுவிடும் விஷயமும் மாற்றத்தை காணும்.' என கூறினார்.

தொடர்புக்கு: 9597938131

Tags: News, Beauty, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top