வண்ணமயமாய் ஜொலிக்கும் ஆடை வடிவமைப்பு உலகத்தர ஜப்ரீன்ஸ்!

வண்ணமயமாய் ஜொலிக்கும் ஆடை வடிவமைப்பு உலகத்தர ஜப்ரீன்ஸ்!

ட்ரெண்ட் - என்கிற வார்த்தை தான் இன்று ட்ரெண்ட். எந்த ஒரு விஷயம் இன்று அதிகம் மக்களால் பேசப்பட்டு, விரும்பப்படுகிறதோ அந்த விஷயத்திற்கு தான் மவுசு அதிகம். என்னதான் இன்று தொழிற்நுட்பங்கள் நாளுக்குநாள் புதிதாகிக் கொண்டே இருந்தாலும், அன்றிலிருந்து இன்றுவரை எப்போதும் ஹாட் ட்ரெண்டாக இருப்பது என்னவோ ஆடைகள் மட்டும் தான்.

ஹாலிவுட் தொடங்கி சின்னத்திரை சீரியல்வரை ஆடைகளின் மவுசு துளிக் கூட குறையவில்லை. புதுப் புதுவகையான ஆடைகளை அணிவது என்பதே மக்களிடையில் பேரானந்தமாய் திகழ்கிறது. ஆனால் அந்த ஆடை வடிவமைப்பதிலிருந்து அதை மக்களிடையில் கொண்டுபோய் சேர்க்கும்வரை ஒரு வகைக் கலைஞர்கள் பெரிதும் செயல்படுகிறார்கள், அவர்கள் தான் ஃபேஷன் டிசைனர்ஸ்.

அந்தந்த நாடுகளின் கலாசாரத்திற்கு ஏற்ப, மக்களின் விரும்பமும் மாறாமல் தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பல்லாயிரக்கணக்கான ஃபேஷன் டிசைனர்கள் செயல்பட்டு வருகிறார்கள். மேலும், இன்று பல இளைஞர்கள் தங்களின் உயர்படிப்பாக ஃபேஷன் டிசைனிங்கையே தேர்வு செய்கிறார்கள். பல தையல் கலைஞர்களும் இன்று ஃபேஷன் டிசைனிங்குகளின் மீது தங்களின் கவனத்தை செலுத்துகிறார்கள். அந்த வகையில் மதுரை ஐயர் பங்களா பகுதியில் இயங்கி வரும் ஜப்ரீன்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோவின் இயக்குநர் திருமதி. ஜப்ரீன் ஜாவித் அவர்களை ஃபேஷன் துறை தொடர்பாக சந்தித்தோம்.

‘எல்லோருக்குமே தங்கள் ஆடையில் புதுமை வேண்டுமென்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். அழகிற்கே அழகு சேர்க்கும் ஆடைகளை வடிவமைப்பது என்பது பிரத்யேகமான ஒரு கலை என்றே கூறலாம். என்னுடைய தாயார் என்னுடைய சிறுவயது முதலாகவே தம்மை தையல் துறையில் ஈடுபத்தியிருந்தார். சிறுவயதிலிருந்து அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கும் தையல் கலையின் மீதான ஆர்வம் அதிகம் ஏற்பட்டது. எனவே, சுமார் 8 ஆண்டு அனுபவத்தோடு தையல் கலையைப் பயின்று, பின் மதுரையில் ஒரு பிரபல ஃபேஷன் டிசைனிங் பயிலகத்தில் பயின்று இன்று ஃபேஷன் டிசைனராக ஆடைகளை வடிவமைத்து வருகிறேன். இன்று பெரும்பாலனோர் கஸ்டமைஸ்டு செய்யப்பட்ட ஆடைகளேயே அதிகம் விரும்புகிறார்கள்.  ஆனால், தென்தமிழகத்தை பொருத்தவரையில் ஃபேஷன் டிசைனர்கள் பற்றி மக்கள் அதிகம் அறியவில்லை. தையல் கலைஞர் மற்றும் ஃபேஷன் டிசைனர்கள் இருவரும் ஒன்று என நினைக்கிறார்கள். தையல் கலைஞர் வாடிக்கையாளர் விரும்பும் வகையில் ஆடைகளை கொடுப்பார். ஆனால் ஃபேஷன் டிசைனர்கள் வாடிக்கையாளர்களின் நிறத்திற்கேற்ற வண்ணம், அவர்களுக்கு ஏற்ற டிசைன், ஆடைக்கு நேர்த்தியான ஆபரணம், சரியான ஹைர் - டைல் என அனைத்தையும் முன்நிறுத்திய பின்தான் ஆடையை வடிவமைப்பார்கள்.

மேலும், அந்த குறிப்பிட்ட ஆடையை வடிவமைக்கும் முன்னரே அந்த ஆடையை அணிந்தால் எப்படி தோற்றம் அளிக்கும் என்பதனையும் வாடிக்கையாளர்களுக்கு ஓவியங்களின் மூலம் தெளிவுபடுத்தியபின் தான் வடிவமைப்பையே துவங்குவார்கள்.

சென்னை, பெங்களுரூ பொருத்தவரையில் இன்று ஃபேஷன் என்பது அதிகப்படியான முக்கியத்துவத்தை பெற்றுவருகிறது. ஆனால், தென்தமிழகத்தை பொருத்தவரையில் ஃபேஷன் தொடர்பான வளர்ச்சி இப்போதுதான் துவங்கியுள்ளது. ஆனாலும் இந்த ஃபேஷன் மற்றும் ட்ரெண்டானது நம்முடைய தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார ஆடைகளை குலைக்காமல் கலாச்சாரத்திற்கு மெறுகேற்றும் வகையிலான ஆடைகளாக வடிவமைப்பதே இன்றைய தமிழக டிசைனர்களுக்கு சவாலாக இருந்து வருகின்றது.

இதனை முன்நிறுத்தி எங்களின் ஸ்டுடியோவில் பிரத்யேகமாக எம்ப்ராய்டரி வேலைகள், சிறுமிகளுக்காக கவுன்கள், பெரியவர்களுக்கு கஸ்டமைஸ்டு ப்ளவுஸ், அனார்கலி, மணப்பெண்களுக்கான ப்ளவுஸ், லெஹங் காஸ் என பெண்களுக்கு கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ப வடிவமைத்து கொடுப்பதை எங்களின் தனிச்சிறப்பாக கொண்டுள்ளோம்.

இன்று, ஃபேஷன் துறையை நோக்கி பல இளைஞர்கள் கற்றுக்கொள்ள அதிகளவிலான ஆர்வம் காட்டி வருகிறார்கள். என்றும் ட்ரெண்டாகவும் மக்களின் மத்தியில் மவுசாகவும் திகழும் ஃபேஷன் துறை வளர்ச்சிப்பாதையிலேயே செல்லும். நிச்சயம் இனி வரவிருக்கும் ஐந்து ஆண்டு காலங்களில் இந்த மாற்றங்களை நாம் மிகவும் வெளிப்படையாகக் காணமுடியும்.’ ஏனக் கூறினார்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top