துபாய் போலவே மதுரையிலும் பாக்ஸ் ரெஸ்டாரண்ட்!

துபாய் போலவே மதுரையிலும் பாக்ஸ் ரெஸ்டாரண்ட்!

அட்டகாசமான இண்டீரியர், அசத்தலான உட்கட்டமைப்பு, விசாலமான அறை மங்கிய ஒளி. இவைதான் ஒரு உணவகத்திற்கு ஹை-கிளாஸ் லுக் ஏற்படுத்துவது. ஆனால் ஹோட்டலை இப்படியும் ஏற்படுத்த முடியுமா என்கிற அளவிற்கு ஒரு ட்விஸ்ட் அளித்திருக்கிறது பெல் குரூப் ஆஃப் ஹோட்டலஸ்.

பெரும்பாலும் நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் ஒரு பொருள் ஏதோ ஒருவகையில் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும். அந்த வகையில் கப்பலில் சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் கன்டெய்னர்களைக் கொண்டே ஒரு ஹோட்டலை மதுரையில் பெல் நிறுவனம் துவங்கியுள்ளது. பெரும்பாலும் இதுபோன்றவைகளை வெளிநாடுகளில் மட்டுமே நாம் காணமுடிந்த வேளையில் மதுரையில் இந்த ஒரு அறிமுகம் மக்கள் பலரை தன்வசம் கவர்ந்துள்ளது. இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள இதன் உரிமையாளர் விசித்திரா ராஜ்சிங் அவர்களிடம் உரையாடினோம்.

இந்த கான்சப்ட் பற்றி..

முற்றிலும், மாடுலர் ஸ்ரெக்சர் கொண்டு இந்த ஹோட்டலை வடிவமைத்திருக்கிறோம். இந்த கான்சப்ட்டை வெளிநாடுகளுக்கு பயணிப்போர் அதிகம் பார்த்திருக்கக்கூடும். ஆனால் நம்முடைய தமிழகத்திலே 1995-ம் ஆண்டே சிவகாசி பெல் ஹோட்டலில் கன்டெய்னர்களால் ஆன காட்டெஜ் ரூம்ஸ்களை அறிமுகப்படுத்திவிட்டோம். பெரும்பாலான ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களின் ஹோட்டல்களை வாடகை இடத்தில்தான் நடத்தி வருகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் வேறு ஒரு இடத்திற்கு மாற வேண்டுமென்கிற நிர்பந்தம் ஏற்பட்டால் சில சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் இந்த மொத்த ஹோட்டலையும் ஒரு வாரத்தில் பிரித்து வேறு இடத்திற்கு மாற்றிவிடலாம். செலவும் மிக குறைவுதான்.

உங்களின் இண்டீரியரும் மிகவும் எளிமையாக உள்ளதே..

ஆம்! எளிமையான இண்டீரியர்தான் இந்த இடத்தை எல்லோருக்கும் ஏற்றவாறு வெளிப்படுத்துகிறது. மேலும், இதன் கட்டுமானர் சமையல் பாத்திரங்களை டெக்ரடேடிவாக அமைத்திருப்பது இந்த இடத்திற்கு அழகு சேர்க்கிறது என்றும் சொல்லலாம்.

இந்த கான்செப்டிற்கான வரவேற்பு பற்றி..

1400 சதுர அடியில் 60 பேர் அமரும் வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்டு 40க்கு 8 என்கிற கணக்கில் இரண்டு தளங்கள் உணவகமும், 40 அடியில் இரண்டு கன்டெய்னர்களை இணைத்து ஒரு கிச்சனும் ஏற்படுத்தியுள்ளோம். நம்முடைய மதுரையைப் பொருத்தளவில் நாங்கள் தான் முதலில் இந்த கான்செப்டை துவங்கியுள்ளோம். இனி வரவிருக்கும் நாட்களிலும் இது போன்ற ஹோட்டல்களையே பெல் குரூப்ஸ் கொண்டுவரவுள்ளது.

இந்த ஹோட்டலை தொடங்கும் முன் ஏதும் ஆய்வுகள் மேற்கொண்டீர்களா?

நிச்சயம்! இது ஒரு புது கான்செப்ட் என்பது ஒரு புறம் இருந்தாலும் மொத்த ஹோட்டலும் ஒரு கன்டெய்னரில் அடங்க வேண்டும். இதில் உணவு அருந்தும் இடம் ஒரு புறம் இருந்தாலும், சமைக்கும் இடம் அதிக முக்கியத்துவம் பொருத்தியது. எனவே, ஒரு ட்ரெயலாக எங்களின் பெல் ஜம்போவில் 20 அடி கன்டெய்னர் வைத்து ஒரு கிச்சன் அமைத்தோம். அது நல்ல வெற்றியை அளித்தது. எனவே தற்போது இங்கு பெல் டிப்பன் பாக்ஸில் சற்று பெரியதாகவே அமைத்திருக்கிறோம்.

உணவைப் பொருத்தவரை டிப்பன் பாக்ஸின் தனிச்சிறப்பு பற்றி..

பெல் ஹோட்டல் எப்போதும் அசைவ உணவிற்கு சிறப்பு பெற்றது. இங்கு மட்டன் கறி, சிக்கன் கறி, மீன் கறி போன்றவை தனிச்சிறப்பாக வீட்டு சாப்பாடு முறையில் செய்யப்படுகிறது. மேலும், இங்கு எங்களின் மற்ற பெல் ஹோட்டலை விட இங்கு விலையும் குறைவாகவே நிர்ணயித்துள்ளோம். மேலும் எங்களின் எதிர்புறம் அப்பல்லோ மருத்துவமனை உள்ளதால் காலை 6 மணிக்கெல்லாம் காஃபி, டீ கவுண்டர்களும், காலை 8 மணி முதல் காலை உணவும் கிடைக்கும் வகையில் அமைத்திருக்கிறோம்.

டிப்பன் பாக்ஸ் என்பதற்கான பெயர் காரணம்..

இது கண்டெய்னர் பாக்ஸ் வடிவில் உள்ளது. மேலும், இங்கு அதிகம் டிப்பன் வகைகள் கிடைக்கும்படி செய்திருக்கிறோம். எனவே, இதற்கு டிப்பன் பாக்ஸ் என பெயரிட்டோம்.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top