சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை இடமாற்றம்?

சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை இடமாற்றம்?

கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையில்  26.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு, சென்னை மெட்ரோ திட்டத்தின் நான்காவது வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

மெட்ரோ ரயில் பணிகளுக்காக மெரினா கடற்கரையில் உள்ள, காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையில்  26.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு, சென்னை மெட்ரோ திட்டத்தின் நான்காவது வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி,  சென்னை கலங்கரை விளக்கத்தில் ஒரு ரயில் நிலையம் அமைய உள்ளது.
 
இதற்கான பணிகளின் போது அங்குள்ள காந்தி சிலை சேதமடைவதை தவிர்க்கும் நோக்கில், தற்காலிகமாக அதனை வேறு இடத்திற்கு மாற்ற தமிழக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அதன்படி, அகற்றப்படும் காந்தி சிலையை ரிப்பன் மாளிகை வளாகத்தில் வைக்கவும், மெட்ரோ பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் அதனை கடற்கரை சாலையில் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top