சென்னையில் முதல் முறையாக காற்றாடி திருவிழா!
Posted on 11/08/2022

சென்னை மகாபலிபுரத்தில் கடற்கரை ஒட்டிய 14 ஏக்கர் பகுதியில் முதன் முறையாக சர்வதேச காற்றாடித் திருவிழாவை நடத்தப்படுவதாக சுற்றுலா துறை செயலாளர் சந்திர மோகன் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்தில் காற்றாடித்திருவிழா க்ளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனரும் காற்றாடித் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளருமான பெனடிக்ட் சேவியோவும் இணைந்து நடத்துகின்றனர்.
இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த காற்றாடி திருவிழா முதல் முறையாக சென்னையில் நடக்க இருக்கிறது.இந்நிகழ்சியில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு நுளைவு சீட்டு இலவசம் எனவும் பெரியவர்களுக்கு நுளைவுகட்டணமாக 150 ரூபாயும் வசுலிக்கப்படுறது.காலை 11 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கும் காற்றாடி திருவிழாவில் தங்களின் சொந்த காற்றாடிகளை பறக்க விட அனுமதி இல்லை.உணவகங்கள்,போட்டிகள் ,கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த திட்டமிட்டுள்ளது.பொழுதுபோக்கு தளம் என்பதாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதாலும் மகாபலிபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தக் காற்றாடித் திருவிழாவில் இந்தியாவின் வெளி மாநிலங்கள், மற்றும் அயல்நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 80 காற்றாடிக் கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றன.
இதனால் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சமூக ஆர்வளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக சுற்றுலா துறை மேளாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளதாவது பறக்கவிடப்படும் காற்றாடிகள் காகித காற்றாடிகள் அல்ல பலூன் போன்று தயாரிக்கப்பட்டுள்ள இந்த வகை காற்றாடிகளின் மாஞ்சா போன்று எந்த வித ரசாயனப்பொருள்களும் தடவப்படாது என்பதால் பறவைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும் தரையில் மேலே 20 அடி வரை மட்டுமே பறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
காற்றாடித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் க்ளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் செய்கிறது. இடத்திற்கான ஏற்பாடுகள் பாதுகாப்பு அம்சங்கள், பங்கேற்பாளர் தங்குமிட வசதி ஆகியவற்றை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் கவனித்துக் கொள்கிறது என்று கூறுகிறார் சேவியோ.
Tags: News