மதுரை கப்பலூரில் புதிய சிமா டாடா கார் ஷோரூம் திறப்பு விழா

மதுரை கப்பலூரில் புதிய சிமா டாடா கார் ஷோரூம் திறப்பு விழா

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட புதிய டீலரான சிமா டாடா கார் நிறுவனத்தினர் புதிய ஷோரூம் திறப்பு விழா இன்று (18.05.17) மதுரையில் நடைபெற்றது. மதுரை கப்பலூர் நான்கு வழிச்சாலையில் இப்புதிய ஷோரூம் அமைந்துள்ளது.

இதன் திறப்பு விழாவில் டாடா நிறுவனத்தின் தெற்கு மண்டல மேலாளர் திரு.சுராஜ் சுப்பாராவ் அவர்கள் ஷோரூமை திறந்துவைத்தார். தமிழ்நாடு பிராந்திய மேலாளர் திரு.சிங்காரவேலு அவர்கள் புதிய டாடா டிகார் காரினை அறிமுகம் செய்துவைத்தார். தமிழ்நாடு பிராந்திய வாடிக்கையாளர் சேவை மேலாளர் திரு.திருமால்மருகன்  அவர்கள் சர்வீஸ் ஒர்க் ஷாப்-ஐ திறந்துவைத்தார்.

இந்த புதிய ஷோரூம் நவீன  வசதிகளுடன் தமிழகத்திலேயே மிகப்பெரிய ஷோரூமாக உருவாக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் அனைத்துவகையான கார்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாடா கார் ஷோரும் வரிசையில் மதுரையில் உள்ள சிமா டாடா ஷோரூம் மிகப்பெரிய பிரம்மாண்டமான ஷோரூம் ஆகும். அதி நவீன முறையில், கண்ணைக் கவரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

4200 சதுரடி பரப்பளவில் ஷோரும், 12,000 சதுரடி பரப்பளவில் 20 கார்கள் ஒரே நேரத்தில் சர்வீஸ் செய்யும் மிகப்பெரிய தளம், மூன்றாவது தளத்தில் லிப்ட் வசதியுடன் சுமார் 100 புதிய கார்கள் பாதுகாப்புடன் நிறுத்திவைக்கும் மிகப் பெரிய அறை, கவர்ச்சிகரமான மின் விளக்கு முகப்புத் தோற்றம், முற்றிலும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட நவீன தொழில்நுட்பம் என பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த ஷோரூம் திறப்பு வாயிலாக டாடா கார் விற்பனை அதிகரிக்கும். இது மதுரை மட்டுமின்றி விருதுநகர், ராம்நாடு மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட டீலராகும்.

மேலும் இதுகுறித்து சிமா டாடா கார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவிக்கையில், மதுரையில் சிமா டாடா கார் நிறுவனம் புதிதாக திறந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இப்புதிய ஷோரூம் வாயிலாக டாடா கார் என்றாலே டாக்ஸ்சி செக்மென்ட் மட்டுமே என்ற ஒரு கருத்து பொய்யாக்கி அனைத்து வகையான புது விதமான கார் மாடல்கள் இங்கு உள்ளன என்பதை அறியச் செய்திடும். நடப்பாண்டில்  டியாகோ, ஹெக்ஷா, டிகார் எனும் மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இது தவிர இங்கு அனைத்துவிதமான டாடா கார் மாடல்களும் விற்பனைக்கு உள்ளது.

இங்கு நன்கு பயிற்சி பெற்ற டெக்னீசியன் மட்டுமே உள்ளனர். இவர்கள் குஜராத், புனே சென்று அங்குள்ள டாடா பயிற்சி நிறுவனங்களில் நேரடி பயிற்சி பெற்றவர்கள். முக்கியமாக தமிழகத்திலேயே முதன் முறையாக கார் வாசிங்-க்கு மேஜிக் வாஷ் எனும் புதிய முறை சிமா டாடா ஷோரூமில் உள்ளது. பிரஷ் ஏதுமின்றி உயர் அழுத்த வாட்டரில் வெறும் 12 நிமிடத்தில் முடித்துவிடும். காரை நிறுத்தினால் போதும் வாட்டர், ஷாம்பு, வேக்ஸ், ஃபோம் என அனைத்து வாஷ்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் மிக கச்சிதமாக முடித்து கொடுத்துவிடும். தண்ணீர் செலவு மிக மிக குறைவு. மேலும் தண்ணீரை வீணாக்காமல் ரீ சைக்கிலிங் செய்து பயன்படுத்தப்படுகிறது. என்றார்.

சிமா டாடா சிறப்புக்கள்:

1) ஞாயிற்றுக்கிழமை ஷோரும் உண்டு.

2) வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவிங் செய்ய விரும்பினால் வீட்டிற்கே கொண்டு வரப்படும்.

3) பெண்களுக்கான ஆட்டோ கியர் (டியாகோ, ஹெக்ஷா, நானோ ) மாடல்கள் உள்ளன.

4) ஒரே நேரத்தில் 20 கார்கள் சர்வீஸ்.

5) ஸ்பீடு சர்வீஸ் (ஒரு மணி நேரத்தில் மட்டும்). 

6) கம்பெனி உதிரி பாகங்கள்.

7) இங்கு நன்கு பயிற்சி பெற்ற டெக்னீசியன்கள் உள்ளனர்.

8) லேட்டஸ்ட் தொழில் நுட்ப எக்யூப்மென்ட்ஸ்.

9) மேஜிக் கார் வாசிங். 

10) மொபைல் வேன் சர்வீஸ் (மதுரை, ராம்நாடு, சிவகங்கை, விருதுநகர்).

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top