அதிமுக பெண் கவுன்சிலர் திடீர் மரணம்: அரசியல் பிரபலங்கள் இரங்கல்
Posted on 06/05/2022

உடுமலை அதிமுக பெண் கவுன்சிலர் ரம்யா என்பவர் திடீரென இன்று காலமானார். இதனையடுத்து உள்ளூர் அரசியல் பிரபலங்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடுமலை 7-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ரம்யா என்பவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த நிலையில், ரம்யா கடந்த சில நாட்களாக, நோய்வாய்ப்பட்ட ரம்யா, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை, திருப்பூர் மாவட்ட அதிமுகவினர், நகர்மன்ற உறுப்பினர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags: News