சௌராஷ்ட்ரா தொழில் வர்த்தக மாநாடு!
Posted on 09/08/2017

மதுரை சௌராஷ்ட்ரா தொழில் வர்த்தக சங்கத்தின் வருடாந்திர மாநாடு ஆகஸ்ட், 2017 11, 12 - 13-ம் தேதிகளில் காமராஜ் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஹாட்சன் ஆடிட்டோரியத்தில் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவினை மதுரை காந்தி என்எம்ஆர் சுப்பராமன் கல்லூரியின் தலைவரான எம்.கே. ஜவஹர் பாபு அவர்கள் துவக்கி வைத்து பேசுகிறார்கள். திண்டுக்கல் பாலவிக்னா மில்ஸின் தலைவர் திரு.டி.கே. சுப்பிரமணியன் அவர்கள் விழாவிற்கு முன்னிலை வகிக்கின்றார்.
11-ம் தேதி செய்யப்படுகின்ற துவக்க விழாவைத் தொடர்ந்து மறுநாள் 12-ம் தேதி சனிக்கிழமை மாலை 05.00 மணிக்கு ஐஸ்வர்யா நாட்டியாஞ்சலி குழுவினரால் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராகவும், தினமணி நாளிதழின் ஆசிரியரான ஸ்ரீ கே.வைத்தியநாதன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்கிறார்கள். அன்றைய தினமே உத்யோக் சேவா ரத்னா விருதுகளை சிறப்பு விருந்தினரான திரு. நல்லி குப்புசாமி செட்டியார் வழங்கிட மதுரை இஏவிஆர் குரூப் கம் பெனிகளின் தலைவரான திரு.இ.ஆர். குமரசேன் பெற்று கொள்கிறார்கள். முன்னாள் காவல்துறை டிஜிபியான டாக்டர் கேஆர் சியாம் சுந்தர், சென்னை இட்காட் நிர்வாக இயக்குனரான எஸ்ஆர் நாகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றார்கள்.
Tags: News, Madurai News