சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு: துணை குடியரசு தலைவர் வருகை!

சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு: துணை குடியரசு தலைவர் வருகை!

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வரும் 28ஆம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வரும் 28ஆம் தேதி சென்னை வர இருக்கிறார்.
 
இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
 
குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top