முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!
Posted on 29/06/2017

மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மதுரையில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி சென்றுள்ளார். இதனிடையே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை புறக்கணிக்க தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த விழாவை புறக்கணிக்க செந்திபாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் ஆகியோர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
Tags: News, Madurai News