தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு?

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு?

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தீவிர தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்களை அதிகரித்தல் போன்ற முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் விரைவாக கொரோனா கட்டுக்குள் வந்தது.
 
மூன்று அலைகள் முடிவடைந்த நிலையில் நான்காவது அலைகுறித்த அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தென் கொரியாவிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா ஓரிரு மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. எனவே மீண்டும் சீனாவில் பரவத் தொடங்கியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் உருமாறி மருத்துவ வல்லுநர்களுக்கு சவாலாக உள்ளது.
 
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாதிப்பு குறைந்து வந்தாலும் அண்டை நாட்டு நிலவரங்களைப் பார்க்கும் போது எந்நேரமும் நிலைமை மாறலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வருகிற நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்று வருகிறது. முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறுத்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top